அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கு பெற்ற ஆனந்த் டெல்டுமே அர்பன் நக்சல் என பா ஜ க தலைவர் அண்ணாமலை விமர்சனம்.!

அரசியல்

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கு பெற்ற ஆனந்த் டெல்டுமே அர்பன் நக்சல் என பா ஜ க தலைவர் அண்ணாமலை விமர்சனம்.!
ஆனந்த் டெல்டும்டே

 'அனைவருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற நூலின் வெளியீட்டு விழாவில் ஆனந்த் டெல்டும்டே

அம்பேத்கரின் நினைவு தினமான டிசம்பர் 6ம் தேதி, 'அனைவருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்நூலை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் வெளியிட கே.சந்துரு, பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

நூல் வெளியீட்டு விழாவில் ஆனந்த் டெல்டும்டே, அம்பேத்கரின் தற்கால அவசியத்தை வலியுறுத்தி பேசியிருந்தார்.

"அம்பேத்கரிடம் அனைவருக்குமான பார்வை இருந்தது. மனிதகுலத்தின் விடுதலைக்காகதான் அவர் போராடினார். அவரது உலகப் பார்வைகளை ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் அதுதான் ஜனநாயகம்" என்றார். 

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட "ஆனந்த் டெல்டும்டே ஒரு அர்பன் நக்சல். 2018-ல் நடைபெற்ற பீமா - கொரேகான்

வன்முறையில் பலர் உயிரிழந்தனர். நக்சல்கள் ஆதரவளித்த அந்த வன்முறை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட முக்கிய நபர் ஆனந்த் டெல்டும்டே. தேசிய புலனாய்வு அமைப்பு அவர் மீது வழக்குப் பதிவு செய்தது. பின்பு உச்சநீதிமன்றம் சென்று ஜாமீன் பெற்றார்" என்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியிருந்தார் அண்ணாமலை.

மேலும், ''அவர்கள் நடத்தும் பத்திரிகையில், சுரண்டால் இருந்தால் கிளர்ச்சி ஏற்பட வேண்டும். கிளர்ச்சி ஏற்படவில்லை என்றால், சூரியன் உதிப்பதற்குள் நகரம் சாம்பலாகி போவதே மேல் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது'' என அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் வாசித்து காண்பித்தார்.

அண்ணாமலை

மேலும் ஆனந்த் டெல்டும்டேவின் சகோதரர் மிலிந்த் டெல்டும்டேவும் ஒரு நக்சல்வாதி என்று அண்ணாமலை பேசியிருந்தார்.

''2021-ஆம் ஆண்டு காத்சிரோலியில் (மத்திய பிரதேசத்தில் உள்ள மாவட்டம் ) சுட்டுக்கொல்லப்பட்ட 22 நக்சல்களில் ஒருவர் மிலிந்த் டெல்டும்டே. மிலிந்த் தனது வாக்குமூலத்தில், என் அண்ணனை பார்த்து தான் நான் நக்சல்வாதி ஆனேன் என்று கூறியுள்ளார். ஆனந்த் டெல்டும்டே யார், எதற்காக சிறையில் இருந்தார் என்பது மக்களுக்கு தெரிய வேண்டும், அவரது தம்பி யார் என்பதும் மக்களுக்கு தெரிய வேண்டும்'' என்று அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் பேசியிருந்தார்.

இந்த கருத்துகளுக்கு எதிர்வினையாற்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பாஜக செய்வது அநாகரிகமான அரசியல் என்று விமர்சித்திருந்தார்.