இரு மொழிக் கொள்கையில் வெற்றி கண்டது திராவிட மாடல் அரசு .!
தென்காசி

இரு மொழிக் கொள்கையில் வெற்றி கண்டது திராவிட மாடல் அரசு
தென்காசியில் திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் பேட்டி
தென்காசி செப் 16
இரு மொழிக் கொள்கையில் வெற்றி கண்டது திராவிட மாடல் ஆட்சி என திமுக மாவட்ட பொறுப்பாளர் வே.ஜெயபாலன் தெரிவித்தார். இது குறித்து நேற்று தென்காசியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் மொழி இனம் பண்பாடு மண் காக்க எடுத்த முன்னெடுப்பில் வெற்றி கண்டவர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின். என்றும், தமிழக முதல்வரின் ஆட்சியில் பாசிசம் வீழ்த்தப்படும் நிலையில் உள்ளது. எதிர்கால இந்தியாவை திராவிட மாடல் இந்தியாவாக கொண்டு வருவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்களை எல்லாம் இந்தியாவே உற்று நோக்குகிறது.
இரு மொழி கொள்கையில் வெற்றி கண்டது திராவிட மாடல் அரசு ஆகும்.
தமிழ்நாட்டின் நலன் மற்றும் ஒற்றுமை கருதி ஓரணியில் தமிழ்நாடு என்னும் மாபெரும் திட்டத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் அறிமுகப் படுத்தினார்.
இதில் ஒரு கோடி குடும்பங்களை இணைத்து நம்மை ஆளுகின்ற ஒன்றிய பாசிச அரசை எதிர்த்து மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் எடுத்துக் காட்டாக தெம்புடனும், திராணியுடனும் தமிழக அரசை முதல்வர் வழி நடத்திக் கொண்டிருக்கிறார்.
தென்காசி தெற்கு மாவட்டத்தில் தென்காசி தொகுதியில் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 570 உறுப்பினர்களும், கடையநல்லூர் தொகுதியில் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 796 உறுப்பினர்களும், ஆலங்குளம் தொகுதியில் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 769 உறுப்பினர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது தென்காசி தெற்கு மாவட்டத்திற்கு கொடுக்கப்பட்ட இலக்கை விட 10% அதிகமாக சேர்த்து இருப்பதாகவும், இளைஞர்களும் புதிய வாக்காளர்களும் அதிக அளவில் இணைந்துள்ளனர் என்றும் தென்காசி மாவட்டத்திற்கு இம்மாத இறுதிக்குள் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாக முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்.
பேட்டியின்போது மாவட்ட துணைச் செயலாளர் கென்னடி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜேசு ராஜன், நகர செயலாளர் சாதிர், ஒன்றிய செயலாளர்கள் அழகு சுந்தரம், ஜெயா, மாவட்ட பிரதிநிதி செல்வம்,பேரூர் செயலாளர் முத்தையா, தொண்டரணி மாவட்ட அமைப்பாளர் இசக்கி பாண்டியன், அலுவலக மேலாளர் ராமராஜ், ஷேக் பரீத், வெல்டிங் மாரியப்பன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
செய்தியாளர்
AGM கணேசன்