விவசாய நிலத்தை குத்தகைக்கு விட்டு தங்களை ஏமாற்றி 50 லட்சம் நஷ்டம் ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது புகார். !

சென்னை

வரதராஜபுரத்தில் 4 ஏக்கர் 75 சென்ட் நிலத்தை குத்தகைக்கு எடுத்து 50 ஆண்டுகளாக பயிர் செய்து வந்த நபர்களை நிலத்தின் உரிமையாளர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக பாதிக்கப்பட்டவர் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு. 

சென்னை தாம்பரம், முடிச்சூர் அடுத்த வரதராஜபுரத்தில் பாத்திமா என்பவருக்கு சொந்தமான 4 ஏக்கர் 75 சென்ட் விவசாய நிலம் இருந்தது, பாத்திமாவிடம் வேணுகோபால் என்பவர் முஸ்லிகா ஒப்பந்தம் செய்து விவசாயம் பார்த்து மூன்று போகம் வருடத்திற்கு 502 மரக்கா நெல்மணிகளை கொடுத்து வந்துள்ளார். இதற்காக சுமார் 50 ஆண்டுகளில் நிலத்தை பாதுகாக்க சுற்றி வேலி அமைத்தது, சிமெண்ட் கல் அமைத்தது என சுமார் 50 முதல் 60 லட்சம் வரை செலவு செய்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் 2008ம் ஆண்டு பாத்திமா இறந்து விட்டார் அதன் பின் அவரது 5 மகன்களுக்கு நெல்மணிகளை கொடுத்து வந்துள்ளனர். 

வேணுகோபாலின் மறைவிற்கு பிறகு அவரது மகன்கள் இதனை தற்போது பராமரித்து வருகின்றனர்.  

பாத்திமாவின் மகன்களான பக்கீர் அகமத், சிராஜுதீன், உபைத்தூர் ரஹ்மான், அக்பர், தாசர் ஆகியோர் எவ்வித முன்னறிவிப்புமின்றி குத்தகை ஒப்பந்தத்தை மீறி ஷாதில் என்பவரின் கட்டுமான நிறுவனத்திற்கு ஒப்பந்தம் போட்டு கட்டுமான பணிக்கு கொடுத்துள்ளதாக தெரியவருகிறது. வேணுகோபாலின் மகன் ஜமீன் பயிர் வைக்க கடந்த டிசம்பர் மாதம் சென்ற போது அடியாட்களை வைத்து மிரட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விரட்டியடித்துள்ளனர். இதனால் பயந்து போன ஜமீன் அங்கிருந்து ஓடி வந்துவிட்டார். 

இது குறித்து ஜமீன் தாம்பரம் மாநகர காவல் ஆணையரிடம், விவசாய நிலத்தை குத்தகைக்கு விட்டு தங்களை ஏமாற்றி 50 லட்சம் நஷ்டம் ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் பொது அறிவிப்பு பலகையை விவசாய நிலத்தில் வைக்கவும் புகார் மனு அளித்துள்ளனர். 

மேலும் தாம்பரம் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.