குடிநீர் குழாயில் சாக்கடை நீர் கலந்து பீறிட்டு வரும் காட்சி

Chennai

பல்லாவரம் காமராஜபுரத்தில் குடிநீர் குழாயில் பீறிட்டுக் கொண்டு வரும் கழிவுநீர் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

கருப்பு நிறத்தில் வரும் அவலம், ஏன் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவில்லை  அனைத்து தரப்பினரும் கேள்வி. 

தாம்பரம் மாநகராட்சி, பல்லாவரம் காமராஜபுரம், கரிகாலன் நகர், செங்குட்டுவன் தெருவில் மாநகராட்சியால் வழங்கப்படும் குடிநீர் குழாயில் கழிவுநீர் பீறிட்டுக் கொண்டு வரும் வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது. 

இந்த வீடியோ மக்கள் வயிற்றுப்போக்கால் பாதிப்படுவதற்கு ஒரு வாரம் முன்பு எடுக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்து, மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்து வருவதை சரிசெய்து விட்டு சென்றனர். பின்னர் குடிநீர் வந்துள்ளது. 

ஆனால் அதற்கு பிறகு குழாய்களில் கழிவுநீர் கலந்து வந்ததால் தான் வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்படுகின்றது. 

10 நாட்களுக்கு முன்பு குழாயில் கழிவுநீர் வருவதாக புகார் வந்ததையடுத்து மாநகராட்சி பணியாளர்கள் மூலம் சரிசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஏற்கனவே அந்த பகுதியில் குடிநீர் குழாயில் கழிவுநீர் வந்துள்ள நிலையில் முறையான நடவடிக்கை இல்லாததே 60க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட காரணமாக அமைந்துள்ளது தெரியவருகிறது. 

குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்க வீடு திரும்பி வருகின்றனர்.