இந்திய குடியுரிமைச் சட்டம் - பாகம் - 4
The citizenship act 1955

வெளிநாட்டவருக்குக் குடியுரிமை பிரிவு (6) Citizenship by Naturalization
வேறு நாட்டைச் சார்ந்த ஒருவர் அந்நாட்டு குடியுரிமையை சட்டப்பூர்வமாக ரத்து செய்திருந்தால்..
இந்திய அரசுப் பணிகளில் தொடர்ச்சியாக 12 மாதங்கள் பணி புரிந்திருந்தால்..
பன்னாட்டு அமைப்புகளில் பணிபுரிந்து, இந்தியாவில் வசிக்க விரும்பினால்..
பதினாரு ஆண்டு காலத்தில் 12 ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்திருந்தால்..
மேற்கண்ட நபர்கள் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கும் பட்சத்தில் பரிசீலனைக்குப் பிறகு, மத்திய அரசின் திருப்தி அடையும் பட்சத்தில் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமைக்கான சான்றிதழ் வழங்கப்படும் ..
இந்தியாவுடன் இணைந்த பகுதிக்கான குடியுரிமை பிரிவு ( 7 ) Citizenship by incorporation of territory
புதிதாக ஏதேனும் ஒரு பகுதி இந்தியாவின் அங்கமாக, சட்டப்பூர்வமாக இணைந்தால், அப்பகுதியில் வசிக்கும் மக்களை, இந்தியப் பிரஜைகள் என அரசு பதிவேட்டில் அறிவிப்பு வெளியிடப்படும். அவ்வாறு அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதியில் இருந்து அவர்கள் இந்தியக் குடிமக்களாகக் கருதப்படுவர்.
குடியுரிமை துறத்தல் பிரிவு பிரிவு ( 8 ) Renunciation of citizenship
1 . இந்தியாவின் குடியுரிமையையும் மற்றொரு நாட்டின் குடியுரிமையையும் பெற்ற, தகுதி உடைய, வயதுக்கு வந்த ஒருவர், அவர் விரும்பி விண்ணப்பிக்கும் பட்சத்தில், அவரிடம் இருந்து இந்திய குடியுரிமை திரும்பப் பெறப்படும்.
2 . விருப்பத்தின் பேரில் இந்தியக் குடியுரிமையை துறந்த ஒருவருடைய மைனர் குழந்தையின் இந்தியக் குடிமகன் என்ற உரிமையும் திரும்பப் பெறப்படும். ஆனால் அந்த குழந்தை வயதுக்கு வந்த ஓராண்டுக்குள் பதிவு செய்தால், இந்தியக் குடியுரிமையை மீண்டும் பெற்றுக் கொள்ள முடியும்.
மு.ர.
தொடரும்