இந்தியக் குடியுரிமைச் சட்டம் - 1955 பாகம் - 3
Indian citizenship

குடியுரிமையின் வகைகள்
பிறப்பின் மூலம் வரும் குடியுரிமை (பிரிவு 3 ) Citizenship by birth
1987 ஜூலை 1 ஆம் தேதிக்கு முன்பாக இந்தியாவில் பிறந்த எவரும் பிறப்பின் மூலம் இந்திய குடிமகனாக கருதப்படுவார்.1987 ஜூலை 1 ஆம் தேதிக்கு பிறகு இந்தியாவில் பிறந்த குழந்தையின் பெற்றோரில் எவரேனும் ஒருவர் அந்த குறிப்பிட்ட தேதியில் இந்திய குடிமகனாக இருந்திருந்தால் மட்டுமே அக்குழந்தைக்கும் இந்திய குடியுரிமை கிடைக்கும்.
2004 டிசம்பர் 3 ஆம் தேதி அன்றோ அல்லது அதற்கு பிறகோ, இந்தியாவில் பிறந்தவர்களின் பெற்றோர் இந்தியக் குடி மக்களாகவோ அல்லது இருவரில் ஒருவர் சட்ட விரோதமாக இந்தியாவில் குடியேறாமல் இருந்தால் மட்டுமே அந்த குழந்தைக்கு இந்திய குடியுரிமை கிடைக்கும். ( அதாவது பெற்றோர் இருவரும் இந்தியாவின் எல்லைக்குள் பிறந்திருக்க வேண்டும் )
பரம்பரை மூலம் வரும் குடியுரிமை (பிரிவு 4 ) Citizenship by Descent
1950 ஜனவரி 26 ஆம் தேதிக்குப் பிறகும் 1992 டிசம்பர் 10 ஆம் தேதிக்கு முன்பும் இந்தியாவுக்கு வெளியே பிறந்த குழந்தையின் தந்தை, அந்தக் குழந்தை பிறந்த போது இந்தியக் குடிமகனாக இருந்திருந்தால் மட்டுமே அந்த குழந்தைக்கு பரம்பரை மூலம் இந்தியக் குடியுரிமை கிடைக்கும்.
2004 டிசம்பர் 3 ஆம் தேதிக்கு பிறகு இந்தியாவுக்கு வெளியே பிறந்த குழந்தைகளை பொறுத்த வரை பிறந்த ஓராண்டுக்குள் ( ஓராண்டு முடிந்து விட்டால் இந்திய அரசு அனுமதியுடன் ) அந்தக் குழந்தை பிறந்த நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் பதிவு செய்திருந்தால் மட்டுமே இந்திய குடிமகனாகக் கருதப்படும்.
குடியுரிமைக்கான விண்ணப்பத்துடன் அந்த குழந்தைக்கு தற்போது உள்ள அல்லது வேறு எந்த நாட்டின் பாஸ்போர்ட் எதுவும் பெறப்படவில்லை என எழுத்துப்பூர்வமான உறுதி மொழியையும் இணைத்து கொடுக்க வேண்டும்.
பதிவு செய்வதன் மூலம் வரும் குடியுரிமை (பிரிவு 5 ) Citizenship by Registration
இந்தியக் குடியுரிமைச் சட்டம் பிரிவு 5 ன் படி கீழ்க்கண்ட ( சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அல்லாத ) வகையிலான நபர்கள் குடியுரிமை கோரி விண்ணப்பித்தால் மத்திய அரசின் பரிசீலனைக்கு பிறகு இந்தியக் குடிமகனாகப் பதிவு செய்து கொள்ள முடியும்.
1 . பதிவு செய்ய விண்ணப்பிக்கும் தேதிக்கு முன் ஏழு ஆண்டுகளாக இந்தியாவில் வசிப்பவர் அல்லது இந்தியாவை பிறப்பிடமாகக் கொண்டவர்.
2 . இந்தியாவை பிறப்பிடமாகக் கொண்ட , பிரிவுபடாத இந்திய எல்லைக்கு வெளியிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ வசிப்பவர்.
3 . பதிவு செய்ய விண்ணப்பிக்கும் தேதிக்கு முன் ஏழு ஆண்டுகளாக இந்தியாவில் வசிப்பது உடன் இந்திய குடியுரிமை உள்ள ஒருவரை திருமணம் செய்து கொண்டவர்
4 . இந்திய குடிமக்களின் வயதிற்கு வராத குழந்தைகள்
5 . ஏழாண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் குடியிருந்து இந்திய குடியுரிமை பெற்றவர்களின் வயது வந்த விண்ணப்பிக்க தகுதி உடைய மகன் அல்லது மகள்
6 . பதிவு செய்ய விண்ணப்பிக்க தகுதியுடைய, வயதுக்கு வந்த விண்ணப்பத் தேதிக்கு ஓராண்டிற்கு முன்பு இருந்து இந்தியாவில் வசிப்பவரும், அவரது பெற்றோர்களின் யாராவது ஒருவர் சுதந்திர இந்தியாவில் குடியுரிமை பெற்றவர்.
7 . பதிவு செய்ய விண்ணப்பிப்பதற்கு முன் ஓராண்டாக இந்தியாவில் வசிப்பவரும், வயது வந்தவரும், ஐந்து ஆண்டுகளாக வெளிநாட்டில் வாழும் இந்தியராக பதிவு பெற்றவர்
இவர்கள் அனைவரும் மத்திய அரசின் பரிசீலனைக்கு பிறகு இந்திய குடிமகனாக பதிவு செய்யப்படுவார்கள்
வெளிநாட்டவருக்கும் குடியுரிமை
மு.ர.
தொடரும்