திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சாதனை விளக்க மாபெரும் பொதுக்கூட்டம்.!

செங்கல்பட்டு

திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சாதனை விளக்க மாபெரும் பொதுக்கூட்டம்.!

திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சாதனை விளக்க மாபெரும் பொதுக்கூட்டம்.!

 தா. மோ.அன்பரசன்- சபாபதி மோகன்- ஆ ராசா பங்கேற்று சிறப்புரை.!

காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க.ஆட்சியின் ஐந்து ஆண்டு சாதனை மற்றும் தேர்தல் பரப்புரை தொடக்க மாபெரும் பொதுக்கூட்டம்.. திருப்போரூர் ரவுண்டானா  அருகில் திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர், திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர், எஸ் ஆர் எல் இதயவர்மன் தலைமையில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்.தா.மோ.அன்பரசன், மற்றும் தி.மு.க.கொள்கை பரப்பு செயலாளர் முனைவர் சபாபதி மோகன், சென்னை மண்டலத் தேர்தல் பொறுப்பாளரும் கழகத் துணைப் பொதுச்செயலாளரும்
நாடாளுமன்ற உறுப்பினர்.ஆ.ராசா ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்திற்கு காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கா.செல்வம்,பேரூர் கழக செயலாளர் திருப்போரூர் பேரூராட்சி மன்ற தலைவருமான மு.தேவராஜ்  திருக்கழுக்குன்றம் ஒன்றிய கழக செயலாளர், தலைமை செயற்குழு உறுப்பினருமான  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வீ.தமிழ்மணி மாவட்ட கழக பொருளாளர், மாமல்லபுரம் நகர செயலாளர்  வெ.விசுவநாதன் திருப்போரூர் தெற்கு ஒன்றிய செயலாளர். பையனூர்  எம்.சேகர்,
 திருக்கழுக்குன்றம் பேரூராட்சி மன்ற தலைவர், பேரூர் கழக செயலாளருமான ஜி.டி யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர்.ஜி.சி.அன்புச் செழியன், தொகுதி பார்வையாளர் எஸ் எம் கே அண்ணாதுரை,மாவட்ட நிர்வாகிகள், மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், பேரூர் நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

செய்தியாளர்

 சுகுமாரன்