சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மருத்துவக் கழிவுகள்.!
செங்கல்பட்டு

சென்னை செங்கல்பட்டு மாவட்டம் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாலாறு கரையோரம் மருத்துவ கழிவுகள் மற்றும் குப்பைகள் சேர்ந்ததும் செங்கல்பட்டு நகராட்சி குப்பைகளைக் கொட்டி எரித்து வருகிறது.
இதனால் ஏற்கனவே இந்த பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு வரும் நிலையில், மர்ம நபர்கள் காலாவதியான மருந்து மற்றும் மாத்திரை உட்பட மருத்துவப் பொருட்களை கரையில் கொட்டியுள்ளனர்.இந்த மருந்து பொருட்கள் முழுமையாக எரிந்தும் எரியாமலும், பாதி எரிந்த நிலையிலும் கிடக்கின்றன. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது உடனடியாக மருத்து மாத்திரைகளை கொட்டும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் நகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.