கேரியில் நடைபெற்ற ஆசியா விழாவின் 10வது ஆண்டில், எங்கள் 'தமிழ் பசங்க' டிராகன் படகு (Dragon Boat) குழு பங்கேற்று வெள்ளி பதக்கம் வென்றது.!
படகு போட்டி

கேரியில் நடைபெற்ற ஆசியா விழாவின் 10வது ஆண்டில், எங்கள் 'தமிழ் பசங்க' டிராகன் படகு (Dragon Boat) குழு பங்கேற்று முதல் முறையாக வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது.
2023 ஆம் ஆண்டு தொடங்கிய 'தமிழ் பசங்க' குழு, வெறும் இரண்டு ஆண்டுகளில் வெள்ளிப் பதக்கம் வென்று, தமிழர் சமூகத்தை முன்னிறுத்தி, ஆசியா விழாவில் அங்கீகாரம் பெற்றிருப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம் என அந்த விளையாட்டுக் குழுவினர் கூறீயுள்ளனர்.
மேலும் இந்தக் குழு வெற்றி பெற்றதை தொடர்ந்து பொதுமக்கள் பலரும் தங்களை பாராட்டுக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
செய்தியாளர்
யாசர் அராபத்