கிருஷ்ணகிரியில் நடைபெற்ற திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் .!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தல் முன்பாக கட்சியில் அதிகப்படியான உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கிருஷ்ணகிரியில் அகில இந்திய திரினாமுல் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது,.
மாவட்ட பொறுப்பாளர் ஜெயபிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் மாரியப்பன், மாநில பொறுப்பாளர் ராஜ்குமார் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
இதன் பின்னர் உரையாற்றிய மாரியப்பன், திரினாமுல் காங்கிரஸ் கட்சியை தமிழகம் மட்டுமின்றி கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் வலுப்படுத்தப்பட வேண்டும். வருகின்ற சட்டமன்ற தேர்தலின் முன்பாக திரினாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் தங்கள் பகுதியில் உள்ள மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை நிறை வேற்றப்பட வேண்டும் ,
இப்படி சிறிய சிறிய பிரச்சனைகளை தீர்க்கும் பட்சத்தில் மக்கள் மத்தியில் மிக எளிய முறையில திரினாமுல் கட்சியை நாம் வலுப்படுத்திட முடியும், ஆகையால் வருகின்ற 2026 ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தப்பட வேண்டும் அதற்கான பணிகளை செய்வதோடு அதிக உறுப்பினர்களையும் சேர்க்கப்பட வேண்டும். அதற்கான பணிகளை இப்போதேதிருந்தே துவங்கப்பட வேண்டுமென வலியுறுத்தினர்.
இதனைத் தொடந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் புதிய நிர்வாகிகளான ஜெயபிரகாஷ், செல்வராஜ், பிரசாத்குமார், பெருமாள், கௌதமி காவியா, குரு, ஜெகதீசன், சங்கர், நரசிம்மன் ஆகியோருக்கான நியமன ஆணையும் இந்த ஆலோசனை கூட்டத்தில் வழங்கப்பட்டது.
செய்தியாளர்
மாருதி மனோ