பலத்த இடியாலும் மழையாலும் ஒரே நேரத்தில் 20 ஆடுகள் இறந்தன.!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே நாட்றம்பாளையத்தில் நேற்று பெய்த மழையின் போது இடி, மின்னல் தாக்கியதில் 20 ஆடுகள் 01 நாட்டு மாடு பலியாகின.!
அஞ்செட்டி அருகே நாட்றம்பாளையத்தில் கிராமத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் நேற்று இரவு முதல் வானத்தில் வேகமூட்டம் காணப்பட்டது. நேற்று மாலை 8:30 மணி அளவில் திடீரென்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது
அப்போது பலத்த சத்தத்துடன் இடி மின்னல் தாக்கியதில் என்.புதூர் பகுதியை சார்ந்த கோவிந்தம்மாள் கணவர் ராஜப்பா மற்றும் இதே பகுதியை சேர்ந்த பழனியம்மாள் கணவர் அரிய கவுண்டருக்கு சொந்தமான 20 ஆடுகளும் ஒரு நாட்டு மாடும் அந்த இடத்திலேயே பலியாகின.
இதுகுறித்து கால்நடை மருத்துவ அதிகாரிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த அதிகாரி சம்பவ இடத்துக்கு வந்து இறந்த ஆடுகளை, அந்த இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தார்.
பலியான ஆடுகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என ஆடுகளின் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.