தமிழக விவசாயிகள் சங்க நிறுவனத் தலைவர் ஐயா நாராயணசாமி 41 வது ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.!
கிருஷ்ணகிரி
தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் ஐயா நாராயணசாமியின் நினைவு நாளையொட்டி ல்வையம் பாளையத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் விவசாயிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
உழவர் பெருந்தலைவர் தமிழக விவசாயிகள் சங்க நிறுவனத் தலைவர் ஐயா நாராயணசாமி 41 வது ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது

இதற்காக கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அருகே உள்ள போத்தாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து தமிழக விவசாய சங்கத்தினை சேர்ந்த வெங்கடேசன் தலைமையில் 20 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோயம்புத்தூர் உள்ள வையம்பாளையம் கிராமத்தில் உள்ள ஐயா நாராயணசாமி அவர்களின் மணி மண்டபத்திற்கு சென்றனர்.
அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அவரது திருவுருவ சிலைக்கு தமிழக விவசாய சங்கத்தை சேர்ந்த வெங்கடேசன், தலைவர் பழனி, மற்றும் கே.வெங்கடேசன், கஜேந்திரன், உதயகுமார், ராஜ்குமார், தமிழ்செல்வன், எட்டிப்பன் முனியப்பன், கோவிந்தராஜ், பூவரசன், பெரியசாமி, ஓட்டுனர் சக்திவேல், ராமசாமி, பாபு ,கோவிந்தராஜ் மற்றும் விவசாய சங்கத்தினர் பொதுமக்கள் கலந்துகொண்டு ஐயா நாராயணசாமி அவர்களின் திரு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
செய்தியாளர்
மாருதி மனோ
