ஓசூரில் பிரசித்தி பெற்ற கோவில்களில் அம்மன் மகிஷாசுர வதம் செய்யும் தத்ரூப நிகழ்ச்சி.விஜயதசமி வெற்றி திருநாளில் சரஸ்வதி தேவியாக அருள்பாலித்த அம்மன்.!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பிரசித்தி பெற்ற கோவில்களில் அம்மன் மகிஷாசுர வதம் செய்யும் தத்ரூப நிகழ்ச்சி.விஜயதசமி வெற்றி திருநாளில் சரஸ்வதி தேவியாக அருள்பாலித்த அம்மன்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் மற்றும் ஸ்ரீ ராகு கேது அதர்வண மகா பிரத்தியங்கிரா திருக்கோயில்களில் நவராத்திரியின் நிறைவு நாளான விஜயதசமி வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது.
திருக்கோயில்களில் நவராத்திரியை கொண்டாடும் விதமாக ஒன்பது நாளும் அம்மனுக்கு பல்வேறு அலங்காரங்கள் விதவிதமாக செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வந்தன.
துர்கா லட்சுமி சரஸ்வதி மற்றும் நவக்கண்ணிகைகள் உள்ளிட்ட அவதாரங்களை அம்மன் எடுத்து பக்தர்களை காப்பதற்காக நவராத்திரியில் கொலு வீற்றிருந்து அருள் பாலிப்பதாக பக்தர்களால் நம்பிக்கையுடன் நவராத்திரி கொண்டாடப்படுகிறது.
ஒன்பதாம் நாள் அம்மன் சரஸ்வதி தேவியாக அவதாரம் எடுத்து அனைத்து கலைகளுக்கும் அதிபதியான தேவி உலகத்தில் கலைகள் பாதுகாக்கப்பட்டு கல்வி சிறந்து விளங்க வேண்டும் என அருள் பாலிக்கிறார். இதைத்தொடர்ந்து, பத்தாம் நாள் இன்று நிறைவு நாளை விஜயதசமி திருநாளாக கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயிலில் அம்மன் மாகாளி ரூபமெடுத்து மகிஷாசுரன் என்கின்ற அரசனை வதம் செய்யும் நிகழ்ச்சி மிகவும் தத்ரூபமாக பக்தர்களால் நடத்தப்பட்டது.
அம்மனால் வதம் செய்யப்பட்ட அரக்கன் மகிஷாசுரன் தீயிட்டு கொளுத்தினார்கள். பின்னர், அம்மன் வதம் செய்து போரில் வெற்றி பெற்றதால் வெற்றி திருநாளை விஜயதசமி என அழைக்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து நவராத்திரியில் மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் முருகர் சரஸ்வதி உள்ளிட்ட தெய்வங்களின் சிலைகளை எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைத்தனர். பின்னர் வில்வ மரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.
இதே போல ஸ்ரீ அதர்வண மகா பிரத்தியங்கிரா கோயிலில் அம்மன் விசேஷ அலங்காரத்தில் திருக்கோயிலை பவனி வந்து சரஸ்வதி தேவியாக காட்சியளித்தார். அவருக்கு சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்கள் வழிபட்டனர்.
இந்த நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு மட்டுமல்லாது அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்து வழிபட்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ