தென்காசியில் காங்கிரஸ் சார்பில் காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு நாள் நிகழ்ச்சி.!
தென்காசி

தென்காசியில் காங்கிரஸ் சார்பில் காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு நாள் நிகழ்ச்சி
தென்காசி அக் 02
தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் வடக்கு ரத வீதியில் அமைந்துள்ள புதுப்பிக்கப்பட்ட காந்தியின் சிலையினை தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரும் தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான எஸ் பழனி நாடார் தலைமை வகித்து திறந்து வைத்து காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்தார்.
அதனைத் தொடர்ந்து காமராஜரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் முரளி ராஜா, மாவட்டத் துணைத் தலைவர் சண்முகவேல், மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் உதய கிருஷ்ணன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஏஜிஎம் கணேசன், சந்தோஷ், ஊத்துமலை பரமசிவன், நகர தலைவர் மாடசாமி ஜோதிடர்,வட்டாரத் தலைவர் பெருமாள்,
பொருளாளர் ஈஸ்வரன், கவுன்சிலர்கள் சுப்பிரமணியன், ரபீக்,குற்றாலம் பேரூராட்சி தலைவர் துரை, பிரேம்குமார், சித்திக், நரி சேட், கதிர்வேல், டேவிட், சுடலையாண்டி, பத்மநாதன், வழக்கறிஞர் சீதா, சிவாஜி மன்றம் கணேசன், முருகன், முகமது இஸ்மாயில், ரசாக், சுப்பிரமணியன், ஆயிரப்பேரி லட்சுமணன், வைகை குமார், முகமது ரஷீத், ஏ எல் ஆறுமுகம்,
பீர்முகமது, பிரபாகர், அரவிந்த், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்