கிழக்கு தாம்பரத்தில் பிரபல சூப்பர் மார்கெட்டில் செல்போன் திருட்டு .!
சென்னை
கிழக்கு தாம்பரத்தில் பிரபல சூப்பர் மார்கெட்டில் செல்போன் திருட்டு
செல்போனை திருடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
சென்னை தாம்பரம் அடுத்த கிழக்கு தாம்பரத்தில் செயல்பட்டு வரும் பிரபல சூப்பர் மார்கெட்டில் பொருட்கள் வாங்குவது போல் வந்த நபர் ஒருவர் கடையில் யாரும் இல்லாததை நோட்டமிட்டு கடையில் இருந்த செல்போனை திருடிச் சென்றார்.
இந்த காட்சிகள் அனைத்தும் கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.
செல்போன் காணாததால் கடையில் வேலை பார்க்கும் மணிகண்டன்(21), சிசிடிவியை ஆராய்ந்த போது கடைக்கு வந்த நபர் ஒருவர் திருடிச் செல்வது பதிவாகி இருந்தது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகளோடு சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் சேலையூர் போலீஸார் சி.எஸ்.ஆர் பதிவு செய்து செல்போன் திருடிச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
