காமராஜர் கருத்தரங்கு கட்டிடத்தில் என் ஓட்டு விற்பனைக்கு அல்ல கருத்தரங்கம் நடைபெற்றது.!
கிருஷ்ணகிரி
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தூய நெஞ்சக் கல்லூரி வளாகம், காமராஜர் கருத்தரங்கு கட்டிடத்தில் என் ஓட்டு விற்பனைக்கு அல்ல கருத்தரங்கம் நடைபெற்றது.
கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவியர், மாணவர்களுக்கு அறப்போர் இயக்கம், சென்னை சார்பில், தேர்தல் பிரச்சாரமாக என் ஓட்டு விற்பனைக்கு அல்ல என்ற கருத்தரங்கை கல்லூரியின் துணை முதல்வர் அருட்தந்தை சாம்சன் சண்முகம் வரவேற்புரையுடன் நடத்தியதில், சென்னை அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. ராதாகிருஷ்ணன் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட தன்னார்வலர்கள், சுரேஷ், அன்பு, முனிராஜ், ராதாகிருஷ்ணன் (விவசாயிகள்-சங்கம்) திருக்குமரன், வெங்கடாசலம் என இணைந்த குழுவில் தலைமையுரையாக, சேலம் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஏஜி.ஜாய் பேசும் போது......
கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கக்கூடிய மாணவர்கள் முதன்முறையாக தம்முடைய ஜனநாயக கடமையை தேர்தலில் வாக்களிப்பது முக்கியத்துவமும் ஊழல், லஞ்சம், மோசடி, இயற்கை வளங்களை கொள்ளையடிப்பது என்பதை சுட்டிக்காட்டி மும், நிர்வாகத்தை சீர்படுத்திட, மக்கள் பிரதிநிதித்துவத்தை சட்டமாக கொண்டு தேர்தல் ஆணையம் தேர்தல் காலங்களில் நடைமுறைப்படுத்தி பிரதிநிதிகளை நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் தேர்வுசெய்கிறது.
இதனை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்-1951 தேர்தல் சட்டமாக அறியப்படுகிறது.தேர்தலானது சுதந்திர இந்தியாவில் 1951- அக்டோபர் 25 முதல் 1952-பிப்ரவரி 21 வரை பல்வேறு காலகட்டங்களாக நடைபெற்றது.
இதில் அன்றைய காங்கிரசை வழிநடத்த நேரு அவர்களால் சாலை வழியாகவும், ரயில் வழியாகவும், விமானம் வழியாகவும், 35 லட்சம் மக்களை 40 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்து இந்திய முழுமைக்கும் தேர்தல் பிரச்சாரமாக செய்தார். காங்கிரஸிலிருந்து பிரிந்த ஜனசங்க், கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), எதிர்க்கட்சிகளாகவும், 1948 பகுதியில் காங்கிரசிலிருந்து வெளியேறிய ஜே.பி.கிருபளானியின், கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி, சோசியலிஷ கட்சி, அகாலி தளம் கட்சி, இந்துமகா சபா கட்சி, ராமராஜ் பரிஸ்த் கட்சி என பல்வேறு கட்சிகளும் களத்தில் இருந்தது.
இருந்தாலும் உலக நாடுகள் வியக்கும் வண்ணமாக இந்திய தேர்தல் ஆனது- 1951இல் நடைபெற்றது. இது தேர்தல் களத்தில் பல்வேறு சவால்களைக் கொண்டிருந்தது மலைப்பகுதிகளுக்கு சாலை வசதிகள் இல்லாத பகுதிக்கும், கடல் தீவுகளுக்கும், நீர் வழி கடந்து இருக்கக்கூடிய பகுதிகளுக்கும், வாக்கு இரும்பு பெட்டிகளை கொண்டு செல்வதும், நீர் வழியில் நீர் ஆற்றைக் கடக்க பாலம் அமைப்பது இப்படி பல்வேறு சவால்களை மட்டுமல்லாது மேலை நாடுகளில் உள்ளது போல இரண்டு கட்சிகளுக்கு மட்டுமான தேர்தலாக இல்லாமல், தேசிய அளவிலான 14 கட்சிகளும், 63 மாகாண அளவில் உள்ள கட்சிகளும், சுயேட்சி என 489 மக்களவை (உறுப்பினர்கள்) பிரதிநிதிகளுக்கானதும், 3282 பிரிக்கப்படாத ஒன்றிணைந்த மாகாணங்களுக்கான தேர்தலாகவும், 669 சட்டமன்றத்திற்காகவும் பட்டியல் இனத்திற்கானயிடம் உட்பட இருந்தது.
இதில் 17.6 கோடி மக்கள் 21 வயது அடிப்படையில் வாக்குரிமையை கொடுக்கக்கூடிய நிலைப்பாட்டில் 85% (சதவீதம்) மக்களுக்கு எழுத்தறிவு இல்லாததால் அவர்கள் கட்சிகளின் பெயர்களைக் கொண்டு வாக்களிப்பதில் பெரும் சாவாலாக இருந்தது சின்னங்கள் அடையாளப்படுத்தி தேர்தல் நடத்தியது.
மேலும் இந்த வாக்காளர்களில் பெண்கள் தங்களுடைய பெயர்களை சொல்ல முடியாது தங்கள் ஆண்களை அடையாளப்படுத்தி அவர்கள் தேர்தலில் வாக்களிக்க விரும்பியதில் அவர்களை சரியாக அடையாளம் காண முடியாததால் 28- லட்சத்திற்கும் மேலான பெண் வாக்காளர்கள் வாக்குரிமை நிராகரிக்கப்பட்டது. இப்படி பல்வேறு நெருக்கடிகளில் இந்த தேர்தல் நடைபெற்ற அன்றைய காலகட்டத்தில் 75%( சதவீதம்)வாக்குகளை பெற்று காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.
இதன் தொடர்ச்சியாக இன்று அளவில் நாம் நம்முடைய மின்னணு தொழில்நுட்ப கருவியான அலைபேசியில் 4g, 5g கூகிள் தொழில்நுட்பத்தில் நாம் இடத்தினை கண்டு அந்த இடத்திற்குச் சென்று மின்னணு வாக்கு கருவியில் செலுத்திடவும், செலுத்திய வாக்கு உறுதிப்படுத்த அவை பிரின்டிங் செய்யப்பட்ட காட்சியை பதிவு செய்து தருவது என முன்னேற்றம் அடைந்திருந்து இருந்தாலும் கூட, இன்றும் பல்வேறு மலைப்பகுதிகளில் வாக்களிக்க மக்களுக்கு கழுதை மேல் வாக்கு பெட்டிகளை கொண்டு ஒரு துச்சமான வாக்குகளை சேகரிக்க, வாக்களிக்க நெருக்கடியை உண்டு பண்ணுவதாக உள்ளது. எனவே அதை எல்லாம் தாண்டி இன்றைய நாளில் ஊழல், முறைகேடு, சட்டவிரோத சொத்து சேர்த்தல், இயற்கை வளங்களை அழித்தல் என பல்வேறு நெருக்கடிகள், உள்ளது.
இதனை பொருளாதார நிபுணர், நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் ஒரு நாடு ஜனநாயக முறைக்கு தகுதி இல்லாமல் இருக்கலாம் ஆனால் ஜனநாயக முறை மூலம் (தேர்தல் மூலம்) மொத்த தொகுதி படுத்திகொள்ளலாம் என்கிறார்..எனவே புதிய வாக்காளர்களான மாணவர்கள் கட்டாயம் நல்லதொரு வேட்பாளரை தேர்ந்தெடுக்கவும், அதன் அடிப்படையில் அந்த வேட்பாளரை சரியான நேரங்களில் தேவையானவற்றை செய்யாது போனால் கேட்கக்கூடிய இடத்தில் நாம் மாறவும் அதற்கான தயாரிப்புகளோடு நாம் இருக்கவும் எதிர் நோக்க வேண்டும் என பேசினார்.
இதனைத் தொடர்ந்த ராதாகிருஷ்ணன் அவர்கள் வாக்குகளை அளித்து நாம் வெற்றி பெறச் செய்யக் கூடிய வேட்பாளர்களை தேர்ந்தெடுத்தது நம்முடைய தேவைகளையும், சேவைகளையும் அரசு வரிப்பணத்தில் ஒதுக்க கூடியவைகள் முழுவதுமாகவும் ஊழல் இல்லாத நிர்வாகத்தில் செயல்படுத்திடவும், மக்கள் மனதாக மாற்றம் பெற்று சரியான வேட்பாளர்களை தேர்வு செய்யவும், ஓட்டுக்கு பணம் பெறுவதும், கொடுப்பதும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி குற்றம்.. அதற்காக பல்வேறு பிரிவுகளில் தண்டனை, அபராதம், வேட்பாளர் தகுதி நீக்கம் எனவும் உள்ளது என சுட்டிக்காட்டியும், என் ஓட்டு விற்பனைக்கு அல்ல என்ற உறுதிமொழி ஏற்பும் செய்து துண்டு பிரசுரங்கள் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
செய்தியாளர்
மாருதி மனோ
