பறக்கும் படை சோதனையில் சிக்கிய 100 டம்மி வாக்குப்பதிவு இயந்திரங்கள்.!

தேர்தல் பறக்கும் படை

பறக்கும் படை சோதனையில் சிக்கிய 100 டம்மி வாக்குப்பதிவு இயந்திரங்கள்.!

சென்னை: சென்​னை​யில் தேர்தல் பறக்​கும் படை அதி​காரி​களின் அதிரடி சோதனையில் 100 டம்மி வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் சிக்​கியுள்ளன.

ஒரத்தநாடு சட்டசபை தொகுதி திமுக வேட்​பாளர் வைத்​திலிங்​கம் படத்​துடன் கூடிய கார்​டு​களும் பறிமுதல் செய்​யப்​பட்​டன.

தமிழ்நாட்டில் வரும் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றன. இதற்கிடையே காவல்துறையுடன் இணைந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை அண்​ணாநகர் சட்​டசபை தொகு​திக்கு உட்​பட்ட அரும்​பாக்​கம் 100 அடி சாலை​யில் நேற்று முன்​தினம் இரவு தேர்​தல் பறக்​கும் படை​யினர் வாகன சோதனை​யில் ஈடு​பட்​டனர். அப்​போது அந்த வழி​யாக வந்த சரக்கு ஆட்டோ ஒன்றை மடக்கி சோதனை செய்​தனர். அப்​போது அதில் 100 டம்மி மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் (இவிஎம்) இருந்​தது தெரிய​வந்​தது.

மேலும், திமுக ஒரத்​த​நாடு சட்​டப்​பேரவை தொகுதி வேட்​பாளர் வைத்​திலிங்கத்​தின் புகைப்​படங்​கள் அடங்​கிய கார்​டு​கள் கொண்ட 5 பார்​சல்​கள் இருந்​தன. இதனைக் கண்டு அதிர்ச்​சி​யடைந்த தேர்​தல் பறக்​கும் படை​யினர் அனைத்​தை​யும் பறி​முதல் செய்​தனர்.

பின்​னர் அவற்றை அண்​ணாநகர் தொகுதி தேர்​தல் நடத்​தும் அதி​காரி அலுவல​கத்​துக்​குக் கொண்டு சென்​றனர். விசா​ரணை​யில் பார்​சல் கொண்டு சென்ற நபர் சேலத்​தைச் சேர்ந்த செல்​வம் என்​பதும், ஆட்டோ ஓட்டி வந்​தவர் அண்ணா நகரைச் சேர்ந்த கணேசன் என்​பதும் தெரிய​வந்​தது.

பறி​முதல் செய்​யப்​பட்ட டம்மி இவிஎம் இயந்​திரங்​களை தனி​யார் பேருந்து மூலம் ஒரத்​த​நாடு சட்​டப்​பேரவை தொகு​திக்கு அனுப்பி வைக்க திட்​ட​மிட்டு இருந்​ததும், வாக்கு சேகரிப்​பின்​போது வைத்​திலிங்​கம் புகைப்​படம் ஒட்​டிய இந்த டம்மி மிஷினை காட்டி வாக்கு சேகரிக்க திட்​ட​மிட்டு இருந்​ததும் தெரிய​வந்​தது.

இந்த விவ​காரம் ஒரத்​த​நாடு சட்​டசபை தொகு​திக்கு உட்​பட்​டது என்​ப​தால் அந்த தொகுதி தேர்​தல் நடத்​தும் அதி​காரிக்​கு தகவல்​ தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டம்மி மெஷின்கள் காட்டி வாக்கு சேகரிப்பது தொடர்பான முறையாக அனுமதியும், இதுகுறித்து வாக்காளர் செலவினங்களில் காண்பிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.