உதயநிதி ஸ்டாலின் சொன்னது உண்மைதானே..நடந்ததை தானே சொல்றாரு : எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த சசிகலா.!
சசிகலா
உதயநிதி ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் பரப்புரை தான் தற்போது பரபரப்பாக போய்க்கொண்டு இருக்கின்றது.
கடந்தமுறை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செங்கலை வைத்துக்கொண்டு பரப்புரை செய்து அதிமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார். தற்போது ஒரு புகைப்படத்தை வைத்துக்கொண்டு எடப்பாடி பழனிசாமியை சரமாரியாக விமர்சித்து பரப்புரை செய்து வருகின்றார். அதைப்போல எடப்பாடி பழனிசாமியின் உதயநிதி ஸ்டாலினுக்கு சவால் விடும் வகையில் விமர்சனம் செய்து வருகின்றார்.
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி எல்லை மீறி விமர்சித்து வருவதாக கண்டனங்கள் எழுகின்றன. முதல்வர் கொரோனாவிலேயே போயிருக்கணும், பால்டாயில் குடித்ததெல்லாம் பன்ச் டைலாக் பேசுறாங்க என்பது போன்ற விமர்சனங்கள் கடும் கண்டனங்களை பெற்று வருகின்றன. பலர் பேசி வரும் நிலையில் தற்போது சசிகலா தனது கருத்துக்களை கூறி வருகின்றார்.
சசிகலா விமர்சனம்
இம்முறை புதிய கட்சி துவங்கி ராமதாஸ் தரப்புடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொள்கிறார் சசிகலா. அவரும் தற்போது தீவிரமான பரப்புரையில் ஈடுபட்டு வரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மோதல் குறித்து தன் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். பரப்புரையில் எடப்பாடி பழனிசாமியும் தற்போதைய முதல்வரும் சண்டையிட்டுக்கொண்டு இருக்கின்றனர்.
பரப்புரையின்போது தாங்கள் செய்த திட்டங்களையும் செய்ய போகின்ற திட்டங்களையும் பற்றி தான் பேச வேண்டும். ஆனால் அதைப்பற்றியெல்லாம் பேசாமல் மாறி மாறி சண்டைபோட்டுக்கொண்டு இருக்கின்றனர். துணை முதல்வராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் ஒரு புகைப்படத்தை காட்டி எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்து வருகின்றார். அதற்கு முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி பால்டாயில் குடித்தவர் என விமர்சனம் செய்கின்றார்.
எடப்பாடி பழனிச்சாமி vs உதயநிதி ஸ்டாலின்
இந்த வயதில் ஒரு பொறுப்புள்ள அரசியல்வாதி யாராவது இப்படி பேசுவார்களா ? இதுவா மக்களுக்கு தேவையான விஷயம். இவர்களை நம்பி ஆட்சியை கொடுத்தால் என்னவாகும். பரப்புரையில் இதைப்பற்றியே பேசிக்கொண்டு இருக்கின்றார். முதலமைச்சர் குறித்தும் அவர் கடுமையாக விமர்சித்து பேசுகின்றார். ஒரு அரசியல் தலைவர், முதலமைச்சராக இருந்தவர் யாரும் இதற்கு முன்பு இவ்வளவு தரக்குறைவாக பேசியதில்லை.
ஆனால் துணை முதலமைச்சர் சொன்னது உண்மை தானே, அவர் காட்டியே புகைப்படத்தை பலமுறை டிவியில் காட்டியிருக்கிறார்கள். அதைத்தான் தற்போது உதயநிதி ஸ்டாலின் காட்டுகின்றார். அதற்கு நீங்க அதனை சரி செய்து இருக்க வேண்டும். பதவி கொடுத்தவர்களிடம் நன்றியுடன் இருக்க வேண்டும். ஆனால் நீங்க பதில் விமர்சனம் செய்கின்றீர்கள். நீங்க செய்த விஷயத்தை தான் அவர் காட்டுகின்றார். அதில் ஒன்றும் தவறில்லை. இதையெல்லாம் தனிப்பட்ட முறையில் பேசிக்கொள்ள வேண்டும்.
தேர்தல் பரப்புரையில் இதைப்பற்றியெல்லாம் பேசக்கூடாது என சசிகலா எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருக்கிறார் சசிகலா.
சசிகலா சொல்வதிலும் நியாயம் இருப்பதாக பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஏனென்றால் தேர்தல் பரப்புரையில் விமர்சனம் மட்டும் செய்யாமல் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன திட்டங்களை செய்வோம் என்பது குறித்து தான் முக்கியமாக பேச வேண்டும் என சசிகலா சொல்கின்றார்.
மக்கள் கருத்து
ஆனால் இவர்களின் பரப்புரையில் விமர்சங்கள் தான் மேலோங்கி இருக்கின்றன. ஆனால் திட்டங்கள் குறித்தும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முதலமைச்சர், துணை முதல்வர் ஆகியோர் பேசி வருகின்றனர். இருந்தாலும் அதிகப்படியான விமர்சனங்களை முன் வைப்பதாக பலர் கருதுகின்றனர். குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமியின் ஒரு சில வார்த்தைகள் காயப்படுத்தும் வகையில் இருந்ததாக திமுக தரப்பு சொல்கின்றனர்.
எனவே இதையெல்லாம் கருத்தில் கொண்டு இனி ஒருவரை ஒருவர் விமர்சிப்பதை குறைத்து கொண்டு, குறிப்பாக தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதை குறைத்து கொண்டு திட்டங்கள் குறித்து அதிகமாக பேச வேண்டும் என்பது தான் பொதுவான மக்களின் எண்ணமாக இருந்து வருகின்றது.
