கும்பகோணத்தில் 75 வயது பூசாரி 13 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல், போக்சோவில் கைது செய்த அனைத்து மகளிர் காவல்துறையினர். !

தஞ்சாவூர்

கும்பகோணத்தில் 75 வயது பூசாரி 13 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல், போக்சோவில் கைது செய்த அனைத்து மகளிர் காவல்துறையினர். !

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ளது திருவலஞ்சுழியில் பிரசித்தி பெற்ற விநாயகர் ஆலயம்.. இந்த கோவிலானது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள சுவாமிமலை முருகன் கோயிலின் இணைக்கோயில் ஆகும்.

மிகவும் சக்தி வாய்ந்த கோயில் என்பதால் சுற்றுவட்டாரத்திலிருந்து ஏராளமானோர் இந்த கோயிலுக்கு தினமும் வந்து செல்வார்கள்.. இந்த கோவியில் அர்ச்சகராக உள்ளவர் விஸ்வநாதர்.. இவருக்கு 75 வயதாகிறது..

அசிங்கமான செயல்

கடந்த மாதம் 8ம் தேதி பாபநாசம் மெலட்டூர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி, தன்னுடைய குடும்பத்துடன் இந்த கோயிலுக்கு சாமி கும்பிட வந்துள்ளார். அப்போது உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்காக சிறுமி தனியாக சென்றிருக்கிறார்.

அப்போது அங்கு வந்த அர்ச்சகர் விஸ்வநாதர், சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தன்னுடைய வக்கிர புத்தியையும், காட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் செய்வதறியாமல் திகைத்த அந்த சிறுமி, அழுது கொண்டே வெளியே வந்துள்ளார். உடனே பெற்றோர் பதறிப்போய், என்ன நடந்தது என்று விசாரித்தால், அர்ச்சகர் செய்த அசிங்கமான செயலை சொல்லி கண்ணீர் விட்டுள்ளார்.

75 வயதான அர்ச்சகர்

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனடியாக கோயில் நிர்வாகத்திடமும், கும்பகோணம் மகளிர் போலீசிலும் புகார் செய்தனர். இந்த புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீசார், 75 வயதான அர்ச்சகர் விஸ்வநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கோயிலுக்கு வந்த பெண் குழந்தையிடம், 75 வயதான அர்ச்சகர் செய்த அசிங்கமான காரியம், கும்பகோணத்தில் பெரும் அதிர்ச்சியையும், சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது.