குற்றாலம், குற்றால நாதசுவாமி கோயிலில் ஐப்பசி விசு திருவிழா கொடியேற்றம் .!
தென்காசி

குற்றாலம், குற்றால நாதசுவாமி கோயிலில் ஐப்பசி விசு திருவிழா கொடியேற்றம்
தென்காசி அக் 11
தென்காசி மாவட்டம், குற்றாலம், குற்றால நாத சுவாமி கோயிலில் ஐப்பசி விசு திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது.
குற்றாலம், குற்றால நாதசாமி திருக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி விசு திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியினை ஜெயமணி சுந்தரம்பட்டர், கண்ணன், கணேசன், மகேஷ் ஆகியோர் ஏற்றி வைத்தனர். இந் நிகழ்ச்சியில் உதவி ஆணையர்/நிர்வாக அதிகாரி ஆறுமுகம், அறங்காவலர் குழு தலைவர் சக்தி முருகேசன், உறுப்பினர்கள் வீரபாண்டியன், ராமலட்சுமி, சுந்தர்ராஜ், ஸ்ரீதர் மற்றும் கோயில் பணியாளர்கள் பக்தர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமும் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் மற்றும் இரவில் கோவில் உள் பிரகாரத்தில் சுவாமி வீதி உலாவும் நடைபெறுகிறது. 16ஆம் தேதி காலை 10:30 மணிக்கு கோவில் மணி மண்டபத்தில் வைத்து நடராஜருக்கு பச்சை சாத்தி தாண்டவர் தீபாராதனை நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத் துறை இணை ஆணையர் அன்புமணி, மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
செய்தியாளர்
AGM கணேசன்