தென்காசியில் தேசிய வருவாய்வழி மற்றும் திறனறி இலவச பயிற்சி வகுப்பு.!
தென்காசி
தென்காசியில் தேசிய வருவாய்வழி மற்றும் திறனறி இலவச பயிற்சி வகுப்பு
தென்காசி நவ 15
தேசிய வருவாய் வழி மற்றும் திறனறி இலவச பயிற்சி வகுப்பு இன்று தென்காசி இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து வட்டாரக் கல்வி அலுவலர் மாரியப்பன் தலைமையில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற தேர்வில் முதல் பரிசு பெற்ற மாணவர் ஹாசினி. தங்கவேல் இரண்டாம் பரிசு பெற்ற மாணவர் கபிலன்,செல்வஸ்ரீ
ஆகிய மாணவர்களுக்கு பாராட்டும் பரிசும் வழங்கப்பட்டது .
கருத்தாளர்களாக பட்டதாரி ஆசிரியர் நெல்சன்,பட்டதாரி ஆசிரியை மாரியம்மாள் சுலேகாள் பேகம் ஆகியோர் கலந்து கொண்டனர். தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த எட்டாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்
