தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் வருகை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தினை பார்வையிட்டார் .!
தென்காசி

தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் வருகை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தினை பார்வையிட்டார்.!
தென்காசி அக் 09
தென்காசி மாவட்டத்திற்கு தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் வருகிற 25-ம் தேதி பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்க வருகை தருகிறார். இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள தென்காசி இ விலக்கு பகுதியில் உள்ள மைதானத்தை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர்
ஏ கே கமல் கிஷோர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ராணி, தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன், திமுக மாவட்ட செயலாளர்கள் ஆவுடையப்பன், ராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டாக்டர் செல்லத்துரை, ஆறுமுகச்சாமி, மாவட்ட துணைச் செயலாளர்கள் கனிமொழி, கென்னடி, பொதுக்குழு உறுப்பினர் ரஹீம், ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், தென்காசி மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் தொழிலதிபர் மணிகண்டன்,ஒன்றிய செயலாளர்கள் அழகு சுந்தரம், ரமேஷ், சிவக்குமார், பொன் செல்வன், நகர செயலாளர்கள் சாதிர், வெங்கடேசன், மற்றும் முகமது அப்துல் ரஹீம், அலுவலக மேலாளர் ராமராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்