தென்காசி சைவ வேளாளர் சங்கம் சார்பில் 5ம் ஆண்டு திருவிளக்கு பூஜை விழா.!

தென்காசி

தென்காசி சைவ வேளாளர் சங்கம் சார்பில் 5ம் ஆண்டு திருவிளக்கு பூஜை விழா.!

தென்காசி சைவ வேளாளர் சங்கம் சார்பில் 5ம் ஆண்டு திருவிளக்கு பூஜை விழா

தென்காசி நவ:- 25

தென்காசி சைவ வேளாளர் சங்கம் சார்பில், தென்காசி காசி விஸ்வநாதர் தெப்பக்குளம் அருகே அமைந்துள்ள கன்னிமாரம்மன் திருக்கோவிலில் வைத்து 5ம் ஆண்டு திருவிளக்கு பூஜை விழா நடைபெற்றது.

இந் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக  சைவ வேளாளர் சங்க மாவட்ட தலைவர் ஆடிட்டர் நாராயணன்,மாவட்ட செயலாளர் நாகராஜன், மாவட்ட அமைப்பு செயலாளர் அய்யம்பெருமாள்,  மாவட்ட பொருளாளர் சங்கரநாராயணன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியில் ராமச்சந்திரன் மகாலிங்கம், நகர் மன்ற உறுப்பினர் ஜெயலெட்சுமிசாமி, கனகராஜ், சிவக்குமார், முன்னாள் வார்டு கவுன்சிலர் ராம கிருஷ்ணன், ரயில்வே கணபதி, பாம்பே ஸ்டோர் இசக்கி, சோம குமுதா, வள்ளி, லதா, இந்திராணி, சாந்தா, கன்னிகா, ராஜம்மாள், சிவசுப்பிரமணியன், அண்ணாமலை, சொசைட்டி சங்கர் சுந்தர் பூசாரி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதமும், காலண்டரும் வழங்கப்பட்டது.

திருவிளக்கு பூஜை ஏற்பாடுகளை திருவிளக்கு பூஜை கமிட்டி தலைவர் மாரிமுத்து, செயலாளர் செண்பகம், பொருளாளர் கோமதி விநாயகம் ஆ ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

செய்தியாளர்

AGM கணேசன்