ரயில்வே தண்டவாளத்தில் காதல் ஜோடி தற்கொலை.!
வேலூர்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்து லத்தேரி அருகே ரயில்வே தண்டவாளத்தில் காதல் ஜோடி தற்கொலை.! காவல்துறையினர் விசாரணை.!
இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி திருமணம் செய்து இரண்டு மாதத்தில் ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து கட்டியணைத்தவாறு தற்கொலை.
ரயில்வே தண்டவாளத்தில் காதல் ஜோடி சடலமாக கண்டெடுத்து காவல்துறையினர் விசாரணை.
காட்பாடி அடுத்த லத்தேரி அருகே உள்ள பட்டியூர் பகுதியில் இருக்கும் சென்னை டு பெங்களூர் ரயில்வே தண்டவாளத்தின் அருகே உள்ள சாலையோரமாக (அப்பாச்சி) இருசக்கர வாகனத்தில் வந்த 27 வயது ஆண் மற்றும் 24 வயது பெண் திருமணமாகி இவர்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு கட்டி அணைத்தவாறு தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இதைக் கண்ட அப்பகுதி மக்கள் ரயில்வே தண்டவாளத்தில் அருகே தலை துண்டான நிலையில் ஒரு காதல் ஜோடி இருப்பதாக ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்
தகவலின் பெயரில் விரைந்து வந்த காவல்துறையினர்
சிதறி கிடந்த உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து
பின்பு விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து இறந்தவர்கள் இருவரும் கணவன் மனைவியா இல்லை வேறு ஏதேனும் தொடர்பு உள்ளவர்களா அல்லது திருமணம் ஆகி குழந்தை இல்லாததால் தற்கொலைக்கு முயன்றார்களா என பல்வேறு கோணத்தில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில்
உயிரிழந்தவர்கள் லத்தேரி அடுத்த அரும்பாக்கத்தை சேர்ந்த மணிகண்டன் (27) இவர் டைல்ஸ் போடும் வேலை செய்து வருகிறார்.
கடலூர் மாவட்டம் நெல்லிகுப்பத்தை சேர்ந்த கோகிலா (24). இரண்டாம் ஆண்டு கல்லூரி பயின்று வருகிறார்.
மணிகண்டனுக்கு ஏற்க்கனவே திருமணம் ஆகி மனைவியை விட்டு பிரிந்து வாழ்த்து வருகிறார்.
இந்நிலையில் மாற்று சமுகத்தை சேர்ந்த இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இது குறித்து பெண் வீட்டார் கடலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் விசாரணைக்கு வரும்படி இருவரையும் காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
இன்று காலை இருசக்கர வாகனத்தில் கடலூர் செல்வதாக கூறி சென்றவர்கள் தங்களை பிரித்து விடுவார்கள் என பயந்து கட்டி அணைத்தவாறு ரயில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
செய்தியாளர்
ஆர்ஜே. சுரேஷ்