தமிழ்நாடு தர்காக்கள் பேரியக்கத்தின் சார்பில் அனைத்து சமுதாய ஏழை எளிய மக்கள் பயன் பொறும் வகையில் 1 கோடியே 3 லட்சம் மதிப்பில் நல உதவிகள். !
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி அருகே உள்ள ஜெகதேவி கிராமத்தில் தமிழ்நாடு தர்காக்கள் பேரியக்கம் சார்பில் ஏழைகளுக்கு
ரூபாய் 1 கோடியே 3 லட்சம் மதிப்பிட்டில் பல்வேறு நல திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துக் கொண்ட மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில மகளிர் அணி தலைவி ஹசினா சையத், மோடி ஆட்சியில் ஒரு பயத்திற்கு உள்ளாகக்கூடிய ஒரு சூழ்நிலையை வட இந்தியா மக்களிடையே ஏற்படுத்தி உள்ளதாக குற்றம் சாட்டினார்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொருளாளரும், தமிழ்நாடு தர்காக்கள் பேரியக்கத்தின் மாநிலச் செயலாளருமான உமர்ஜி ஏற்பாட்டில் ஜெகதேவி
தமிழ்நாடு தர்காக்கள் பேரியக்கத்தின் சார்பில் அனைத்து சமுதாய ஏழை எளிய மக்கள் பயன் பொறும் வகையில் சுமார் ரூ.80 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

தமிழ்நாடு தர்காக்கள் பேரியக்கத்தின் மாநிலத் தலைவர் ஆசாத்காதிரி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு தமிழ்நாடு தர்காக்கள் பேரியக்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் பானாசாகிப், மாநில ஆலோசகர் அஷ்ரப் அலி, தமிழகத்தின் திருச்சி, கிருஷ்ணகிரி, தென்காசி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாவட்டத் தலைவர்களான ரஷீத் கலந்தர், சுல்தான்சாஹிப், முஹம்மது கமாலுதீன், கௌரவத் தலைவர் ஹைதர்அலி, திருச்சி மாவட்ட செயலாளர் சமீம் முகமது, ஒருங்கிணைப்பாளர் முஹம்மத், தென்காசி மாவட்ட செயலாளர் நாகூர்மீரான், கிருஷ்ணகிரி மாவட்ட அமைப்பாளர் முகமதுநூர், மாவட்ட இளைஞரணியை சேர்ந்த இர்ஷாத், நயாஸ், நகர செயலாளர் அஷ்ரப் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்,

மேலும் இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக பாண்டிச்சேரி மாநிலத்தின் முன்னாள் கூட்டுறவுத் துறை அமைச்சர் கந்தசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில மகளிர் அணி தலைவி ஹசினா சையத். ஆகியோர் கலந்து கொண்டு சாதி,மத இன பாகுபாடு இல்லாமல் 80 வயது கடந்த மூத்த பெண்மணிகளுக்கு தலா பத்தாயிரம் வழங்கப்பட்டது, இதேபோல் பர்கூர் ஐ.எல்.சி மாற்றுத்திறனாளிகள் உண்டு உறைவிட பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு நல திட்ட உதவியாக1 லட்சம் ரூபாய்கான காசோலைகள் வழங்கப்பட்டது. மேலும் பெற்றோரை இழந்து கல்வி பயிலும் 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு தர்காக்கள் பேரியக்க நிர்வாகிகளிடம் ரூ.40 லட்சத்திற்கான காசோலையை வழங்கப்பட்டது.
இதே போல ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட சுமார் 1000 க்கும் மேற்பட்ட பெண்களுக்கும் நலத்திட்ட உதவிகள்
வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறப்புரை ஆற்றியதமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில மகளிர் அணி தலைவி ஹசினா சையத் மோடி ஆட்சியில் ஒரு பயத்திற்கு உள்ளாகக்கூடிய ஒருசூழ்நிலையை வட இந்தியா மக்களிடையே ஏற்படுத்தி ஆட்சி செய்கிறார். ஆனால் தென் இந்தியாவில் அது போன்ற சூழ்நிலை இல்லாமல் அனைவரும், சகோதர, சகோதரிகளாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இங்கு மசூதிகளின் கலச்சாரமும், இந்துக்களின் கலாச்சாரமும், கிறிஸ்தவர்களின் கலாச்சாரமும் ஏகோபத்தியமாக உள்ளது. ஆனால் வட இந்தியாவில் இஸ்லாமியர்கள் வசிக்கின்ற இடங்களில் ஆசான் கூட பள்ளிவாசல்களில் எழுப்ப முடியாத சூழ்நிலையில் தான் இஸ்லாமியர்களில் வாழ்க்கை உள்ளது, இந்த சூழ்நிலையில் ஒரு இஸ்லாமிய சமுதாய மதத்தினை சேர்ந்த உமர் ஜி என்பவர் சாதி, மத, வேறுபடுகளை கடந்து அனைத்து சமுதாய மக்களும் நம்முடைய சகோதர, சகோதரியாக பாவித்து ரூபாய் 1 கோடியே 3 லட்சம் மதிப்பீட்டில் திருமண உதவித் தொகை என பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி இருப்பது உண்மையிலேயே மிகவும் பாராட்டக்கூடியது. இன்னும் பல்வேறு திட்டங்களை அவர் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
செய்தியாளர்
மாருதி மனோ
