தேசிய மக்கள் கட்சியின் மாநில தலைவர் புரட்சி வீரன் கோ.சீனிவாசன் தலைமையில் ஆலோசனை கூட்டம். !

கிருஷ்ணகிரி

தேசிய மக்கள் கட்சியின் மாநில தலைவர் புரட்சி வீரன் கோ.சீனிவாசன் தலைமையில் ஆலோசனை கூட்டம். !

தேசிய மக்கள் கட்சியின் மாநில தலைவர் புரட்சி வீரன் கோ.சீனிவாசன் தலைமையில் சேலம் மாவட்டம், ஓமலூர் மேற்கு மண்டல தலைமை அலுவலகத்தில் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலுக்கான அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் கார்த்திக் முன்னிலை வகிக்க, சீனிவாசன் சுவாமிகள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

இக்கூட்டத்தில் தேசிய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் தனித்து நிற்பதற்கு விருப்பம் தெரிவிப்பதால் அதற்கான விருப்பமனு வழங்கப்பட்டு,  தேர்தல் களப்பணி விரைவு படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. 

தேர்தல் பணிகள் குறித்த பேசியதேசிய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் சீனிவாச சுவாமிகள்.... கலப்பணி எப்படி சிறப்போடு வேகமாக செயல்பட வேண்டும் எனவும், வருகின்ற தேர்தலில் பெருவாரியான வாக்குகள் சேகரிக்க அனைவரும்  ஒத்துழைப்பு வழங்கிடவும் அறிவுறுத்தினார்.

செய்தியாளர் 

மாருதி மனோ