பௌர்ணமியை முன்னிட்டு ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி அம்மன் கோவிலில் மிளகாய் வத்தல் யாகம் :!
கிருஷ்ணகிரி

பௌர்ணமியை முன்னிட்டு ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி அம்மன் கோவிலில் மிளகாய் வத்தல் யாகம் : பிரபல நடிகை சாமி தரிசனம்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், மோரனப்பள்ளி பகுதியில் ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு பௌர்ணமி நாளிலும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மிளகாய் வத்தல் யாகம் நடைபெறுவது வழக்கமாக உள்ளது.
அதேபோல இன்று பௌர்ணமி நாளை முன்னிட்டு பிரத்தியங்கிரா தேவி அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருஷ்டிகள் நீங்கி மக்கள் நலமுடன் வாழ மிளகாய் வத்தல் யாகம் நடந்தது.
இந்த மகா யாகத்தில் பிரபல நடிகை சில்பா மஞ்சுநாத் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டார். இவர் தமிழில் விஜய் ஆண்டனி நடித்த காளி படத்தில் கதாநாயகியாகவும், வலை, சிங்க பெண்ணே, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், பேரழகி ஐ எஸ் ஓ போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
இந்த வழிபாட்டில் நடிகை சில்பா மஞ்சுநாத் அவரது குடும்பத்தினர் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பிரத்தியங்கிராதேவி முன்பு வளர்க்கப்பட்ட மகா யாகத்தில் மிளகாய் வத்தல் போட்டு திருஷ்டிகள் நீங்க அனைவரும் நலமுடன் வாழ அம்மனை வழிபட்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ