ஆவின் பொது மேலாளர் சிவகுமாரை சமுக நுகர்வோர்பாதுகாப்பு நல சங்கத்தின் மாநில பொதுசெயலாளர் நேரில் சந்தித்து வாழ்த்து.!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தில் புதியதாக பொறுப்பேற்றுள்ள ஆவின் பொது மேலாளர் சிவகுமாரை சமுக நுகர்வோர்பாதுகாப்பு நல சங்கத்தின் மாநில பொதுசெயலாளர் டாக்டர் சந்திரமோகன் நேரில் சந்தித்து தமிழக அரசு பொதுமக்கள் கூடும் இடங்களில் ஆவின் விற்பனை நிலையம் துவங்கப்பட்டு வருவதை வெகுவாகப் பாராட்டினார்.
கிருஷ்ணகிரி ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தில் ஆவின் பொது மேலாளராக பணியாற்றி வந்த சுந்தரவடிவேல் பதவி உயர்வு பெற்று ஈரோடு மாவட்டத்திற்கு பணி மாறுதல் மூலம் சென்றுள்ளதையடுத்து, கிருஷ்ணகிரி ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்திற்கு ஈரோடு மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த சிவகுமார் கிருஷ்ணகிரி ஆவின் பொது மேலாளராக பதவி ஏற்றுக் கொண்டார்,
இதனையடுத்து புதியதாக பொறுப்பேற்றுள்ள ஆவின் பொது மேலாளர் சிவகுமாரை சமுக நுகர்வோர் பாதுகாப்பு நல சங்கத்தின் மாநில பொதுசெயலாளர் டாக்டர் சந்திரமோகன் நேரில் சந்தித்து பாரதியார் நூலினை வழங்கி பணி சிறக்க தனது வாழ்த்தினையும் பாராட்டையும் தெரிவித்துக் கொண்டார்.
அப்போது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான தமிழக அரசு தமிழகத்தில் எப்போதுமே இல்லாத வகையில் பால் விவசாயிகளிடம் இருந்து 40, லட்சத்து 31 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருவதை வெகுவாகப் பாராட்டினார்.
தொடர்ந்து புதியதாக 1 லட்சத்து 351 புதிய கூட்டுறவு சங்கங்கள் அமைத்து பால் கொள்முதல் செய்து, பால் உற்பத்தியாளர்களுக்கு 1லிட்டர் பாலுக்கு ரூ.3 விதம் 5 கோடியே 33 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கியதற்கும், வாடிக்கையாளர்களை மிகவும் கவரும் வகையில் பொதுமக்கள் கூடும் இடங்களில் ஆவின் விற்பனை நிலையம் துவங்கப்பட்டு வருவதை பாராட்டினார்.
அப்போது ஆவின் மேலாளர் அய்யங்கார், நுகர்வோர் அமைப்பை சேர்ந்த ஜெய்சன், லோக்கேஷ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ