அறம் கிருஷ்ணன் எழுதிய நான்கு நூல்கள் வெளியீடு.!
கிருஷ்ணகிரி

அறம் கிருஷ்ணன் எழுதிய நான்கு நூல்கள் வெளியீடு இராஜேந்திர சோழனின் கடாரம் கொண்டான் விழா.
அறம் இலக்கிய அமைப்பு மற்றும் ஓசூர் எலைட் ரோட்டரி சங்கம் இணைந்து,கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் KAP திருமண மண்டபத்தில் நேற்று (05.10.25) மாலை நடைபெற்றது.
முப்பெரும் விழாவில் அறம் கிருஷ்ணன் எழுதிய நான்கு நூல்களும், இராஜேந்திர சோழன் கடாரத்தை வென்று ஆயிரம் ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு இராஜேந்திர சோழனின் படத்திறப்பும், கடாரம் கொண்டான் விருதும் வழங்கப்பட்டது.
கவிஞர் இராசு வரவேற்புரை நிகழ்த்த, முன்னால் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ. மனோகரன் அவர்கள் தலைமையில் விழா தொடங்கியது. எலைட் ரோட்டரி சங்கத்தின் தலைவர் கே.செந்தில்குமார் மற்றும் பி. காளிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
“நிழல் தேடும் நிழல்கள்” என்ற சிறுகதை நூலை மு. முருகேஷ், முதுநிலை உதவி ஆசிரியர் இந்து தமிழ் திசை அவர்கள் வெளியிட, ஆர் .குப்புசாமி சார்பாக TVS தொழிற்சங்க நண்பர்கள் பெற்றுக்கொண்டார்கள்.
“பேசாத வார்த்தைகள் “ என்ற கவிதை நூலை கவிஞர் அறிவுமதி அவர்கள் வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். கவிஞர் ஜீவானந்தம் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
“அறமாகிய நான்” என்ற தன் வரலாறு நூலை பேராசியர் கவியருவி அப்துல் காதர் அவர்கள் வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். மல்லிகை மகள் ஆசிரியர் ம.கா.சிவஞானம் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
“இராஜேந்திர சோழனின் “கங்கையும்-கடாரமும்” என்ற வரலாற்று நூலை கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழு தலைவர் இரா. கோமகன் அவர்கள் வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். கவிஞர் நந்தவனம் சந்திரசேகரன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
இரா கோமகன் அவர்கள் இராஜேந்திர சோழன் உருவப் படத்தை திறந்து வைத்தார். இராஜேந்திர சோழனின் உருவபடத்தை ஓவியமாக வரைந்த ஓவியர் இராசராசன் அவர்களுக்கு “கடாரம் கொண்டான்" என்ற விருது வழங்கப்பட்டது. எழுத்தாளர் கமலாலயன், கவிஞர் இரா.பூபாலன், கவிஞர் சம்பத் ஜி ஆகியோர் நூல் அறிமும் செய்தார்கள்.
Rtn .DG .Er.p சிவசுந்தரம், பி.சரவணகுமார், பி.சங்கர், சாய்ராம், ப.ரவி, கருமலை தமிழாழன், சுவாதி சரவணன், சிவந்தி அருணாசலம், செம்பரிதி, வே.சிவக்குமார், நா.பெரியசாமி, விஜயராகவன், ஜெகநாதன், ஹீரா குகன், லோகநாயகன், பிரியன், மணியம்பாடி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நான்கு நூல்களின் ஆசிரியரும், அறம் இலக்கிய அமைப்பின் தலைவரும், தொழிலதிபருமான அறம் கிருஷ்ணன் அவர்கள் ஏற்புரை வழங்கினார்.
அறம் இலக்கிய அமைப்பு மற்றும் எலைட் ரோட்டரி சங்கம் ஆகியவற்றை சேர்ந்த உறுப்பினர்களான வெங்கடாசலபதி, பிரேம், சதிஷ், மாதையன், சாம்ராஜ், வேடி, கார்த்திக் ஆகியோர் மற்றும்எழுத்தாளர்கள், நண்பர்கள், உறவினர்கள், குடும்ப உறுப்பினர்கள், பொதுமக்கள் என 300 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ