கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை நகரில் பிரதமர் மோடியின் 76 வது பிறந்த நாள் விழா. !
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை நகரில் பிரதமர் மோடியின் 76 வது பிறந்த தினம் முன்னால் மாவட்ட துணைத்தலைவர் R.சிவா அவர்களது தலைமையிலும் முன்னாள் மாவட்ட செயலாளர் P.v.வரதராஜ் ,மண்டல் முன்னாள் தலைவர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலையிலும் சிறப்பாக நடைபெற்றது.
மாவட்ட முன்னால் பொதுசெயலாளர் S.ஜெயராமன் வரவேற்புரை நிகழ்த்த, விழாவில் Ex MP நரசிம்மன் மற்றும் முன்னாள் மாவட்ட தலைவர் கொ.தர்மலிங்கம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு விழா பேருரை நிகழ்த்தினர்.
மேலும் விழாவில் மாதவன், தனக்கோடி, மகேந்திரன், ஆறுமுகம், ராஜீ, சத்தியமூர்த்தி, விஸ்வந்தன், தங்கம், கதிர்வேல், ஜோதி, ஜெ.சங்கர்,Mc மாதேஷ் டைல்ஸ் மாதேஷ், Jm ரமேஷ் போச்சம்பள்ளி ராஜேந்திரன் மற்றும் காவி சொந்தங்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
விழாவில் பிறந்தநாள் கேக்வெட்டி நகரில் உள்ள தூய்மை பணியாளர்கள் அனைவர்க்கும் புத்தாடைகள் வழங்கப்பட்டது. மேலும் 1000 தேக்கு மர கன்றுகளும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
முன்னாள் மண்டல் பொறுப்பாளர் கிரிதரன் நன்றி கூற, கூட்டம் இனிது நிறைவு பெற்றது.
செய்தியாளர்
மாருதி மனோ