குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கார்பன் உமிழ்வு குறைப்பு குறித்த பயிலரங்கம்.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கார்பன் உமிழ்வு குறைப்பு குறித்த பயிலரங்கம் இந்திய மாநில தொழில் வளர்ச்சி மற்றும் முதலீட்டு கழகங்களின் பேரவை தலைமை இயக்குநர் (COSIDICI-யின் Director General) ஹன்ஸ் ராஜ் வர்மா இ.ஆ.ப., மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

உடன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்ன பாலமுருகன், மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர் முத்துராஜ், தொழில் பாதுகாப்பு துணை இயக்குநர் திருமதி.உமா பாரதி உள்ளிட்ட பலர் உள்ளனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
