அதிமுக நகர கழக அலுவலக திறப்பு விழா. !

கிருஷ்ணகிரி

அதிமுக நகர கழக அலுவலக திறப்பு விழா. !

கிருஷ்ணகிரி அதிமுக நகர கழக அலுவலகத்தை கழக துணை பொதுச்செயலாளர் KP. முனுசாமி,BABL. MLA குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான K.அசோக்குமார். MLA, Ex.MP  தலைமை தாங்கினார். 

மாநில மகளிர் அணி துணை செயலாளர் திருமதி பரிதா நவாப் மற்றும் நகர கழக செயலாளர் PNA.கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழக பொறுப்பாளர் நவாப் வரவேற்புரையாற்றினார். மாவட்ட MGR இளைஞர் அணி செயலாளர் கார்த்திக் பால்ராஜ் நன்றியுரை வழங்கினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் KP.காத்தவராயன், ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் TM.தமிழ்செல்வன், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் KPM.சதீஷ்குமார் மற்றும் இன்நாள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட, நகர, ஒன்றிய, சார்பு அமைப்பு செயலாளர்கள், தொண்டர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ