சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தின் மாநில தலைவராக பொறுப்பேற்ற எஸ் கே நவாப் , வாழ்த்து தெரிவித்த அவஞ்சர்ஸ் கிரிக்கெட் அணி. !
கிருஷ்ணகிரி

சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தின் மாநில தலைவராக பொறுப்பேற்ற எஸ் கே நவாபிற்கு கிருஷ்ணகிரி அரசு பள்ளி ஆசிரியர்களின் கிரிக்கெட் அணி கிருஷ்ணகிரி அவெஞ்சர்ஸ் சார்பாக சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் சந்திரமோகன், கிருஷ்ணகிரி மாவட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள் கிருஷ்ணகிரி அவெஞ்சர்ஸ் அணி தலைவர் அருண், துணைத் தலைவர் ஜெகன் மற்றும் திருப்பதி, சதீஷ், வினோத், வடிவேலன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
மேலும் கிருஷ்ணகிரி அவெஞ்சர்ஸ் ஆசிரியர்களின் அணி சார்பில் விரைவில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் எனவும் ஆசிரியர் குழுவில் தெரிவித்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ