நடிகர் விஜயின் பிரச்சார வாகனம் பறிமுதல். வெளியான அதிரடி உத்தரவு.!!

த வெ க

நடிகர் விஜயின் பிரச்சார வாகனம் பறிமுதல். வெளியான அதிரடி உத்தரவு.!!

தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை தொடங்கிய விஜய் அடுத்து வரும் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டம் தோறும் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.

அந்த வகையில் கரூரில் அவர் பிரச்சாரத்திற்காக சென்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 மக்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இது தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்துள்ளது. வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த குழு சிசிடிவி காட்சி ஆதாரங்களை கைப்பற்றி விசாரணையை தொடங்க இருக்கிறது.

இதற்கிடையில் நடிகர் விஜய்யின் பிரச்சார வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வைரலானதாக நீதிபதி கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் அவரது பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார். அந்த வாகனத்தின் உள்ளே மற்றும் வெளியே உள்ள சிசிடிவி ஆதாரங்களை கைப்பற்றவும் உத்தரவு.

மேலும் Hit and Run வழக்கில் விஜயின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளதால் உயர் நீதிமன்ற உத்தரவின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பனையூர் அலுவலகத்தில் உள்ள வாகனத்தை பறிமுதல் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் பலர் தலைமுறைவாக இருக்கும் நிலையில் அவர்களை கைது செய்யவும் தனிப்படைகள் விரைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.