இலத்தூரில் திமுக சார்பில் இலவச மருத்துவ முகாம் .!
தென்காசி

இலத்தூரில் திமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்
மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தொடங்கி வைத்தார்
தென்காசி அக் 05
தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திமுக இளைஞர் அணி செயலாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமானஉதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, தென்காசி மெடிக்கல் சென்டர், ப்ரோ விஷன் ஐகேர் இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம் தென்காசி மாவட்டம், இலத்தூர் லட்சுமி ஹரிஹரா உயர் நிலைப் பள்ளியில் வைத்து நடை பெற்றது.
இந் நிகழ்ச்சிக்கு செங்கோட்டை ஒன்றிய திமுக செயலாளர் ரவிசங்கர் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் கனிமொழி, கென்னடி, பொதுக்குழு உறுப்பினர்கள் ரஹீம், சாமித்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பரமசிவன் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் மருத்துவ முகாமினை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
இந் நிகழ்ச்சியில் தென்காசி சட்டமன்றத் தொகுதி பார்வையாளர் மருத்துவர் கலை கதிரவன், ஒன்றிய செயலாளர்கள் திவான் ஒலி, அழகு சுந்தரம், பேரூர் செயலாளர் சங்கர் என்ற குட்டி, பண்டாரம், மாவட்ட சார்பு அணி அமைப்பாளர் முகமது அலி, தொண்டரணி இசக்கி பாண்டியன், பண்பொழி திருமலை குமாரசாமி கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் இசக்கி, வடகரை முகமது உசேன், ராஜராஜன், முத்துராமலிங்கம், பேச்சாளர் முத்துவேல், அழகு தமிழ், வேலுச்சாமி, ஹக்கீம், பழனிச்சாமி, தம்பி துரை, மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மருத்துவ முகாமில் இலத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.முடிவில் மாவட்ட பிரதிநிதி சுரேஷ்குமார் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகள் அனைத்தையும் தென்காசி தெற்கு மாவட்ட பொருளாளர் ஷெரீப் சிறப்பாக செய்திருந்தார்.
செய்தியாளர்
AGM கணேசன்