கேளம்பாக்கம் கமலா நகரில் அருள்மிகு ஸ்ரீ ராஜகணபதி நூதன ஆலயம் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா.!

செங்கல்பட்டு

கேளம்பாக்கம் கமலா நகரில் அருள்மிகு ஸ்ரீ ராஜகணபதி நூதன ஆலயம் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா.!

கேளம்பாக்கம் கமலா நகரில் அருள்மிகு ஸ்ரீ ராஜகணபதி நூதன ஆலயம் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா.!

 ஆயிரக்கனக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அருளாசி பெற்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்தில் அமைந்துள்ளது கேளம்பாக்கம் ஊராட்சி., இப்பகுதி கமலா நகரில் புதிதாக எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ ராஜ கணபதி நூதன ஆலயம் அருள்மிகு ஸ்ரீ வள்ளி தேவசேனா ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஸ்ரீ கால பைரவர் ஆலயங்களுக்கு அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் (குடமுழுக்கு நன்னீராட்டு விழா) கேளம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் ராணி எல்லப்பன் தலைமையில் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி தி.மு.க.தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் எக்ஸ்பிரஸ் எல்லப்பன் ஏற்பாட்டில் கிராமத்தார்கள் விழா குழுவினர்கள் ஒருங்கிணைப்பில் ஞாயிற்றுக்கிழமை(08/02/2026) காலை சுமார் ஆறு மணிக்கு மேல் 
அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா சீரும் சிறப்புடன் நடைபெற்றது.

இம் மாபெரும் ஆன்மிக நிகழ்வில் கேளம்பாக்கம் சாத்தாங்குப்பம்,ஜோதிநகர்,
திருப்போரூர்,தையூர் மேலும் சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு, உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு மஹா கும்பாபிஷேகத்தை கண்டுகளித்து தரிசனம் செய்து ஸ்ரீ ராஜ கணபதியின் அருளாசி  பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

சிறப்புடன் நடைபெற்ற  இக்கும்பாபிஷேக விழாவினை கேளம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் ராணிஎல்லப்பன், துணைத் தலைவர் பாஸ்கரன், ஊராட்சி வார்டு உறுப்பினர் கலாவதி தணிகாசலம்,  சாத்தாங்குப்பம் விரிவாக்கம் பகுதி குடியிருப்போர் நல சங்கத்தினர், கமலாநகர் பகுதி பொதுமக்கள், திருக்கோவில் விழா குழுவினர்களான முருகேசன் சின்னதுரை, சிவக்குமார், பாலசுப்பிரமணி, ஜெயபாலன், ராஜசேகரன், கருணாநிதி, கந்தசாமி, கா.கோ. பழனி, இ.ரமேஷ், சம்பத், பழக்கடை ரமேஷ், சதீஷ், பழனி சிங்காரவேலு, குமார், ,ஆட்டோ அசோக், அன்பு, கஜேந்திரன், சுல்தான்,  ரெயின்ஷா,,அப்துல் சுக்கூர், மணி, மோகன், கோபி சந்தோஷ், கார்த்திக், விஜயராஜ், சத்யன், கவியரசு, ஆனந்த், பிரகாஷ் ஆகியோர் ஒருங்கிணைந்து செய்திருந்தனர்.

நாளை(09/02/2026) முதல் தொடர்ந்து 48 நாட்களுக்கு பக்தர்களுக்கு அருள்மிகு ஸ்ரீ ராஜகணபதி நூதன ஆலயத்தில் மண்டல பூஜைக்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகிகள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது..

செய்தியாளர்

   சுகுமாரன்