பர்கூரில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்துக் கொண்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.!

கிருஷ்ணகிரி

பர்கூரில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்துக் கொண்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்துக் கொண்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சசிகலாவும், ஓ.பி.எஸ்சும் அதிமுகவுக்கு பாதகம் ஏற்படுத்த மாட்டார்கள் என்று தினகரன் தெரிவித்த கருத்துக்கு ஓ அப்படியா என புன்னகை செய்தவாறு பதில் அளிக்காமல் சென்றார். 

கிருஷ்ணகிரி மாவட்டம்,  பர்கூரில் ஓ.பி.எஸ் ஆதரவாளரான முன்னாள் எம்.எல்.ஏ கோவிந்தராஜ் இல்லத்திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மணமக்களை வாழ்த்தினார். அப்போது தொண்டர்கள் பலரும் ஓ.பி.எஸ் உடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னால் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர்.

அதில் சசிகலாவும், ஓ.பன்னீர்செல்வமும் அதிமுகவுக்கு பாதகம் ஏற்படுத்தமாட்டர்கள் என டிடிவி தினகரன் கருத்து தெரிவித்து உள்ளது குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு ஓ அப்படியா என புன்னகை செய்த ஓ.பி.எஸ் பதில் அளிக்க மறுப்பு தெரிவித்து விட்டார். இந்த மாத இறுதிக்குள் கூட்டணி குறித்து தெரியவரும் என கூறினார்.

செய்தியாளர் 

மாருதி மனோ