கம்பன் கழக தலைவர் மற்றும் செயலாளருக்கு கம்பன் காவலர் விருது. .!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி கம்பன் கழக தலைவர் மற்றும் செயலாளருக்கு கம்பன் காவலர் விருது.
கிருஷ்ணகிரி கம்பன் கழக தலைவர் முனைவர் இ.ரவிந்தர் மற்றும் செயலாளர் முனைவர் க.அருள் ஆகியோருக்கு சின்ன சேலம் தமிழ் அமைப்புகள் சார்பில் " கம்பன் காவலர் விருது " வழங்கி கௌரவிக்கப்பட்டது.
திரைப்பட இயக்குனர் எழுத்தாளர் தயாரிப்பாளர் ராசு.அழகப்பன் மற்றும் பேராசிரியர்கள், சின்ன சேலம் தமிழ் அமைப்புகள் நிறுவனத்தலைவர் கவிச்சிற்பி கவிதைதம்பி ஆகியோர் விருது வழங்கி கௌரவித்தனர். அதை கிருஷ்ணகிரி மாவட்டம் கம்பன் கழக பொறுப்பாளர்கள் அனைவரும் பாராட்டினர்.
செய்தியாளர்
மாருதி மனோ