கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் 26/11/25 புதன்கிழமை காலை 11.00 மணியளவில் 76 ஆவது இந்திய அரசியல் அமைப்பு தின முகவுரை ஏற்கப்பட்டது.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் 26/11/25 புதன்கிழமை காலை 11.00 மணியளவில் 76 ஆவது இந்திய அரசியல் அமைப்பு தின முகவுரை ஏற்கப்பட்டது
கிருஷ்ணகிரி நகர் பகுதியில் இயங்கி வரும் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கல்லூரி முதல்வர் மரு. கே சத்தியபாமா எம்.எஸ் (ஜெனரல் சர்ஜன்) அவர்கள் தலைமையில் தமிழக அரசின் சட்டத்துறை அறிவுறுத்தலின்படி இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் முகவுரையினை 26.11.25 காலை 11.00 மணிக்கு ஏற்கப்பட்டது.


76 ஆவது இந்திய அரசியல் அமைப்பு தின முகவுரை
இந்திய மக்களாகிய நாம் இந்திய நாட்டினை ( சமநலச் சமுதாயமும் சமயச் சார்பின்மையும் மக்களாட்சி முறையும் அமைந்ததொரு குடியரசாக நிறுவவும்) அதன் குடிமக்கள் அனைவரும் சமுதாய பொருளியல் அரசியல் நீதி எண்ணம் அதன் வெளியீடு கோட்பாடு, சமய நம்பிக்கை, வழிபாடு ஆகியவற்றில் தன்னுரிமை சமுதாய படிநிலை, வாய்ப்புநலம். இவற்றில் சமன்மை ஆகியவற்றை எய்திடச் செய்யவும் அவர்கள் அனைவரிடையேயும் தனிமனிதனின் மாண்பு (நாட்டு மக்களின் ஒற்றுமை ஒருமைப்பாடு) இவற்றை உறுதிப்படுத்தும் உடன்பிறப்புரிமையினை வளர்க்கவும் உள்ளார்ந்த உறுதியுடையவராய் நம்முடைய அரசமைப்பு பேரவையில் 1949 நவம்பர் 26 ஆம் நாளில் ஈங்கியதனால் இந்த அரசமைப்பினை ஏற்று இயற்றி நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம் என்னும் முகவுரை ஏற்கப்பட்டது.
இந்நிகழ்வில் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு. சந்திரசேகரன் உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் மரு. மது மகப்பேறு பிரிவு உதவி பேராசிரியர்கள் மரு. சிவமஞ்சு , மரு. உமாராணி , மரு. சரஸ்வதி , செவிலியர் கண்காணிப்பாளர்கள் திருமதி மகாலட்சுமி, சரளாமாதவி, முத்து சாந்தி பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் திரு பாலாஜி (கட்டிடப் பணிகள்) திரு பாலாஜி (மின் பணிகள்) ஆகியோரும் இதே போல் போதுப்பள்ளி வளாகத்தில் செயல்படும் புதிய மருத்துவக் கல்லூரியில் துணை முதல்வர் மருத்துவர் சாத்விகா தலைமையில், உதவி உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் மரு. தினேஷ் நிர்வாக அலுவலர் சரவணன் , இளநிலை நிர்வாக அலுவலர் சுமதி, அலுவலக கண்காணிப்பாளர்கள் முத்துராமன், சின்னண்ணன், மீரா, தாஜுன்னிஷா, கிரிஸ்டல் மேலாளர் பிலிப் மோன்ஸ் உள்ளிட்டோருடன் அமைச்சுப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், இதர தொழில்நுட்ப பணியாளர்கள், மற்றும் கிரிஸ்டல் பணியாளர்கள் உட்பட அனைவரும் 76 வது இந்திய அரசியலமைப்பு தின முகவுரையை ஏற்றுக்கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
