உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.!

கிருஷ்ணகிரி

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.!

பெத்தனப்பள்ளி ஊராடசியில்நடைப்பெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றியம், பெத்தனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கிராம மக்கள் பயன் பெறும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.

காட்டி நாயனப்பள்ளி முருகன் திருக்கோவில் அருகில் நடைபெற்ற இந்த முகாமினை மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினரும், கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான  மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை  குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து பெத்தனப்பள்ளி ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளை சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில் நடைபெற்ற இந்த முகாமில் அனைத்து அரசு துறை வாரியாக அரங்குகள் அமைத்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டன.

மேலும் இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் நூறு நாள் வேலை,கலைஞரின் மகளீர் உரிமை தொகை, வீட்டுமனைப் பட்டா, இலவச மருத்துவ காப்பீட்டு திட்டம், கல்வி கடன், ரேசன் அட்டை , குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை தீர்வு காண வேண்டி துறைவாரியாக மனுக்களை சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கினார்கள். மேலும் இந்த சிறப்பு முகாமில் தகுதியான மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து அதற்கான ஆணைகளும் வழங்கப்பட்டது,

மக்கள் பயன் பெறும் வகையில் நடைபெற்ற இந்த முகாமில் வட்டார வளர்ச்சி அலுவலர் உமாசங்கர், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பகுத்தறிவு துணை அமைப்பாளர் ஆனந்தன், மற்றும் திமுக கட்சியை சேர்ந்த மகேந்திரன், சுரேஷ், செந்தில், தக்காளி மாணிக்கம், கெளரப்பன், வடிவேல், ராமசந்திரன் பிரபாகரன், குணா, சத்திஷ் மற்றும் ஊராட்சி செயலாளர் கனகா உள்ளிட்ட பலர் இந்த முகாமில் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ