மனைவியை கத்தியால் குத்தியும், குரல்வளையை நெறித்தும் கொன்ற கணவன் நீ செத்தியா செத்தியா என கூச்சல். !

பொள்ளாச்சி

மனைவியை கத்தியால் குத்தியும், குரல்வளையை நெறித்தும் கொன்ற கணவன் நீ செத்தியா செத்தியா என கூச்சல். !

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பட்டப்பகலில் மனைவியை ஆவேசமாக கொன்றுள்ளார் கணவர்.. பொதுமக்கள் முன்னிலையிலேயே இந்த கொடிய சம்பவம் நடந்துள்ளது..

நேற்றைய தினம் மிகப்பெரிய அதிர்வலையை இந்த கொலை சம்பவம் ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பையும் கிலியையும் தந்து வருகிறது. இது தொடர்பான விசாரணையையும் போலீசார் நடத்தி வருகிறார்கள்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மரப்பேட்டை பகுதியை சேர்ந்த தம்பதி பாரதி - ஸ்வேதா.. இருவரும் 9 வருடங்களுக்கு முன்பே காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.. இவர்களுக்கு கிரேஷ்(9), கேப்ரியல்(7) ஆகிய 2 குழந்தைகள் இருக்கிறார்கள்.

பாரதி பெயிண்டர் வேலை பார்க்கிறார்.. 26 வயதான ஸ்வேதா, ஒரு தனியார் கடையில் வேலை பார்த்து வருகிறார். சமீபகாலமாகவே ஸ்வேதாவின் நடத்தையில் பாரதிக்கு சந்தேகம் வலுத்து வந்துள்ளது.. இதனால் தகராறும் ஏற்பட்டிருக்கிறது. இதில் ஸ்வேதா மனம் வெறுப்படைந்து, ஏபிடி ரோட்டில் தனியாக வீட்டை வாடகைக்கு எடுத்து குழந்தைகளுடன் சென்றுவிட்டார்.

ஸ்வேதா பாரதி

இந்நிலையில், நேற்றுமுன்தினம் வழக்கம்போல் குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு, அப்படியே வேலைக்கும் சென்றுள்ளார்.. தெருவில் நடந்து சென்றபோது, பைக்கில் வந்த பாரதி, ஸ்வேதாவை வழிமறித்து குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். இதற்கு ஸ்வேதா மறுக்கவும், தெருவிலேயே தகராறு வெடித்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த பாரதி, ஸ்வேதாவை விரட்டி சென்று, மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்த முயன்றார்.. உடனே ஸ்வேதா கத்தி கூச்சலிடவும், பொதுமக்கள் திரண்டு வந்து பாரதியை பிடிக்க முயன்றனர்..

கிட்ட வந்தால் கொன்றுவிடுவேன் என மிரட்டிய பாரதி

ஆனால் பாரதி, யாராவது கிட்ட வந்தால், குத்தி கொன்றுவிடுவேன் என்று மிரட்டினார். பிறகு ஸ்வேதாவையும் கத்தியால் குத்திவிட்டார். ஸ்வேதா ரத்த வெள்ளத்தில் விழுந்த பிறகும், உயிருக்கு போராடி கொண்டிருந்த நேரத்தில் பக்கத்திலிருந்த சாக்கடைக்குள் தள்ளி கழுத்தை நெரித்தாராம்.. இதில் ஸ்வேதா உயிர் பறிபோனது.

பிறகு சாக்கடையிலிருந்து ஸ்வேதாவின் சடலத்தை வெளியே எடுத்து, சாலையில் போட்டு அங்கேயே உட்கார்ந்துள்ளார்.. அதற்குள் பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தரவும் அவர்கள் விரைந்து வந்து பாரதியை கைது செய்தனர்.. ஸ்வேதாவின் நடத்தையில் சந்தேகம் இருந்ததால்தான் கொன்றதாக வாக்குமூலம் தந்தார். இதையடுத்து போலீசார் ஸ்வேதாவின் சடலத்தை போஸ்ட் மார்ட்டம் செய்யவும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சாவு சாவு என ஆவேசமான கணவன்

இதற்கிடையே பாரதி நடுரோட்டில் சுவேதாவை குத்தி கொலை செய்த வீடியோக் காட்சிகள் சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், கத்தியால் குத்தப்பட்ட ஸ்வேதா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார். அப்போதும் ஆவேசம் தீராத பாரதி, ஸ்வேதாவை தர, தரவென இழுத்து அருகே உள்ள சாக்கடைக்குள் தள்ளுகிறார்..

சாக்கடை கால்வாய்க்குள் ஸ்வேதாவை தள்ளி, அவரது கழுத்தில், கால் மற்றும் கையை வைத்து நெரித்தபடி "சாவு.. சாவு" என்று சொல்லியபடியே கொடூரமாக கொலை செய்கிறார்.. இதில் சுவேதா துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழக்கிறார்..

நீ செத்தியா செத்தியா என கத்திக் கூச்சலிட்ட பாரதி

ஸ்வேதா இறந்ததை உறுதி செய்து கொண்ட பாரதி, "நீ செத்தியா, செத்தியா" என சத்தம் போட்டபடி அவரது உடலை சாக்கடை கால்வாயில் இருந்து தூக்கி வெளியில் போட்டு விட்டு, அதன் முன்பு உட்கார்ந்து கொண்டு, அவரது உடலையே பார்த்தபடி இருக்கிறார்..

"இத்தனை ஆம்பளைங்க நிற்கிறீங்களே... யாராவது போய் தடுங்க" என்று ஒரு பெண்மணி கதறும் காட்சிகளும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.. சுற்றிலும் ஏராளமான பொதுமக்கள் நிற்கும்நிலையில், ஒருவராலும் ஸ்வேதாவை காப்பாற்ற முடியவில்லை. இந்த வீடியோவை பார்த்தவர்கள் அத்தனை பேரும் பதைபதைத்து அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்