மேட்டுப்பாளையத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட தமுமுக, மமக -வினர் கைது

Tmmk MMK

மேட்டுப்பாளையத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட தமுமுக, மமக -வினர் கைது

வயாதான மூதாட்டியின் உடலை அடக்கம் செய்வதை தடுத்த நபர்கள்.! 

கோவை மாவட்டம் வீரபாண்டி, காளிபாளையம் பகுதியில் முஸ்லிம் குடும்பத்தினர் சிலர் குடும்பங்களாக வசித்து வருகின்றனர்.

இங்கு வசிக்கக் கூடிய குடும்பத்தில் மூதாட்டி ஒருவர் கடந்த ஒரு வருட காலத்திற்கும் மேலாக நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருந்துள்ளார். 

இந்த மூதாட்டி நேற்று உடல்நிலை மோசமான நிலையில் இயற்கை எய்தினார்.

மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய குடும்பத்தினர் மற்றும் உறவினர் ஏற்பாடு செய்துள்ளனர். அதற்காக ஏற்கனவே பல உடல்களை அடக்கம் செய்து வரக் கூடிய இடத்தில் குழி தோண்டியுள்ளனர்.

இதைப் பார்த்த சிலர் இங்கு அடக்கம் செய்யக் கூடது என பிரச்சினை செய்துள்ளனர்.

மூதாட்டியின் குடும்பத்தினரும், உறவினர்களும் அழுது புலம்பியும் அடக்கம் செய்ய விடாமல் பிரச்சினை செய்தனர் அப்பகுதியைச் சுற்றியுள்ள சிலர்.

பின்னர் மூதாட்டியின் குடும்பத்தினர் காவல்துறையில் தகவல் தெரிவித்தனர்.தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் பிரச்சினை ஓயவில்லை.

பின்னர் இச்சம்பவத்தை பற்றி தகவல் அறிந்த ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் முஹம்மது ஷரீப், அக்பர் அலி, மீன் அய்யூப் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று காவல்துறையினரிடமும், பிரச்சினைக்குரியவர்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இந்த நிலையில் இச்சம்பவம் பற்றி கோவை வடக்கு மாவட்ட மமக, தமுமுக நிர்வாகிகளுக்கு தகவல் கிடைக்கவே அப்துல் ஹக்கீம், அப்பாஸ் மற்றும் தமுமுக, மமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டு மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்தினர்.

தமுமுக, மமக வடக்கு மாவட்ட தலைவர் அப்துல் ஹக்கீம் தலைமையில் மறியலில் ஈடுபட்ட சுமார் 20 - ற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் மாவட்ட காவல் கண்காளிப்பாளர் உத்தரவிட்டதின் பேரில் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி மூதாட்டியின் சடலத்தை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்ப்பட்டனர்.இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆசிரியர் & வெளியீட்டாளர்

மேட்டுப்பாளையம் மு.ர.