மேட்டுப்பாளையம் காவல் நிலையம் சார்பாக போதை பொருள் விழிப்புணர்வு நான்கு முனைப்பேரணி .!

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் காவல் நிலையம் சார்பாக போதை பொருள் விழிப்புணர்வு நான்கு முனைப்பேரணி .!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் போதைப்  பொருட்களின் கெடுதல் பற்றிய விழிப்புணர்வு பேரணி உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் அதியமான், காவல் ஆய்வாளர் சின்ன காமனன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இந்தப் பேரணியானது சுமார் 1,000 த்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளை கொண்டு நடத்தப்பட்டது.

இந்தப் பேரணி மேட்டுப்பாளையம் பிரதான சாலைகளான ஊட்டி சாலை, கோவை சாலை, அன்னூர் சாலை, அண்ணாஜிராவ் சாலை ஆகிய சாலைகளில் மாணவிகள் பேரணியாக சென்று பேருந்து நிலையத்தில் ஒன்று கூடக் கூடிய நான்கு முனை பேரணியாக நடத்தப்பட்டது. 

மேலும் போதைப் பொருட்களின் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாசகங்கள்,  விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ஒலிக்கப்பட்டன.

இந்தப்பேணியில் உதவி ஆய்வாளர் ஆனந்த், போக்குவரத்து உதவி ஆய்வாளர் சதீஷ், மற்றும் தலைமைக் காவலர்கள், தனிப்படைக் காவலர்கள் என மேட்டுப்பாளையம் காவல்துறையைச் சார்ந்த காவல் துறையினர் கலந்து கொண்டு பேரணியை சிறப்பித்தனர்.

செய்தியாளர்

   லூயிஸ் 

ஆசிரியர் & வெளியீட்டாளர்

மேட்டுப்பாளையம் Rafi ( MR )