கோவை சாரமேடு பகுதியில் அர்- ரஹ்மான் அகாடமி, பெண்களுக்கான கட்டணமில்லா கல்வியகம்.!
கோவை

கோவை சாரமேடு பகுதியில்
அர்- ரஹ்மான் அகாடமி, பெண்களுக்கான கட்டணமில்லா கல்வியகம் திறப்பு விழாவில் கோவையில் போதை பழக்கத்திற்கு மாணவர்கள் அடிமையாகாமல் இருக்க இலவச டியூசன் செண்டர் சிறந்தது *அஜய் தங்கம் காவல் உதவி கமிஷனர் அஜய் தங்கம் பேச்சு.!
கோவை சாரமேடு பகுதியில் அர் ரஹ்மான் அகாடமி பெண்களுக்கான கட்டணமில்லா கல்வியகம் தொடக்க விழா நடைபெற்றது.
இதில் தெற்கு சரக போலீஸ் உதவி கமிஷனர் அஜய் தங்கம், கல்வி பூங்காக்கள் மற்றும் விளையாட்டுக்குழு தலைவர் மாலதி 86 வது மாமன்ற உறுப்பினர் அகமது கபீர் உதவும் உள்ளங்கள் பொதுநல அறக்கட்டளையின் நிர்வாகிகள் பைசல் , சத்தார் , ஹக்கீம், உமர், சிராஜ்தீன் , ஜிபைர், மன்சூர், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பெண்களின் பாதுகாப்பிற்காக தமிழக காவல்துறை உருவாக்கிய காவல் உதவி ஆண்டிராய்டு செயலியின் பயன்பாடு மற்றும் போலீஸ் அக்கா திட்டம் தொடர்பான முக்கிய தகவல்களை அஜய் தங்கம் விளக்கி பேசினார்.
மேலும் பெண் கல்வியின் அவசியம் மற்றும் சமூகத்தில் பெண்கள் சிறந்த ஆளுமைகளாக உருவெடுக்க வேண்டும் என்ற லட்சிய உணர்வை எடுத்துரைத்தார்.
இதில் 10, 12-ம்வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஆசிரியர் & வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi (MR)