அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் கல்லூரி வாயிலில் போராட்டம். !

கிருஷ்ணகிரி

அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் கல்லூரி வாயிலில் போராட்டம். !

கிருஷ்ணகிரி மாவட்டம் பருகூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் தங்களது வாழ்வாதாரம் சார்ந்த அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தி வாயிலில் முழக்கப்போராட்டம் நடைபெற்றது.

முனைவர் ம.பழனி தலைமையில் நடைபெற்ற போராட்டத்திற்கு முனைவர்.ப.வரலட்சுமி முன்னிலை வகித்தார்.

இந்த போராட்டத்தின்போது.....

1. பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு பரிந்துரைத்த மாதம் ஊதியம் ரூபாய் 57,700 வழங்க வேண்டும்.
2. தற்பொழுது பதினோரு மாதங்கள் மட்டுமே ஊதியம் வழங்கப்பட்டு வரும் நிலையில் பன்னிரண்டு மாதங்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும்.
3. அரசு பணியாளர்களுக்கு உள்ளதைப் போன்று PF & EF பிடித்தம் செய்ய வேண்டும்.
4. மகளீருக்கு பேறுகால விடுப்பு வழங்க வேண்டும்.
5. பணிக் காலத்தில் இறந்தவர்களுக்கும் ஓய்வு பெறுபவர்களுக்கும் பணிக் கொடையாக ரூபாய் 25 இலட்சம் வழங்க வேண்டும்.

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வாயில் முழக்கப் போராட்டமாகத் தொடங்கிய இப்போராட்டம் இனி அடுத்தடுத்த நாட்களில் பணிப் புறக்கணிப்பு போராட்டமாகத் தொடரும் எனவும் அறிவித்துள்ளனர்.

இப்போராட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ