அரசு ஆடவர் கலைக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் தமிழக அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள வழங்கும் விழா நடைபெற்றது .!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் அரசு சார்பில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துக் கொண்டு 85 ஆயிரத்து 711 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கி தேர்தல் வாக்குறுதிகள் மட்டுமின்றி சொல்லாத பல்வேறு திட்டங்களை இந்த அரசு செய்து உள்ளது ஆகையால் வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும் திமுக கூட்டணி கட்சி ஆதரவோடு மிகப்பெரிய வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி பிடிக்கும் என்று குறிப்பிட்டார்.
கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் தமிழக அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள வழங்கும் விழா நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தலைமையில் நடைப்பெற்ற இந்த விழாவிற்கு வருகை தந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காவல் துறையினரின் மரியாதையை ஏற்றுக் கொண்டு விழா மேடை அருகில் அமைக்கப்பட்டு அரசு துறை சார்ந்த சிறப்பு அரங்குகளை பார்வையிட்டார்..
பின்னர் விழா மேடையில் இருந்தபடியே 1, 114 புதிய திட்டங்களுக்கு
2 ஆயிரத்து 855 கோடி மதிப்பிட்டில் அடிக்கல் நாட்டியும், முடியுற்ற திட்ட பணிகளையும் துவக்கிவைத்தார்,
தொடர்ந்து வருவாய்துறை மூலம் தமிழகத்தில் முதல் முறையாக கிருஷ்ணகிரியில் 85 ஆயிரத்து 711 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களையும், மாற்றுத் திறனாளிகளுக்கு பேட்டரி மூலம் இயங்கக்கூடிய மூன்று சக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கி விழா பேருரை ஆற்றியபோது, தேர்தல் வாக்குறுதிகள் மட்டுமின்றி சொல்லாத பல்வேறு திட்டங்களும் இந்த ஆட்சியில் செய்து உள்ளோம். ஆகையால் வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும் திமுக கூட்டணி கட்சி ஆதரவோடு மிகப்பெரிய வெற்றி பெற்று மீண்டும் திமுக ஆட்சி பிடிக்கும் என்று குறிப்பிட்டார்.
மேலும் இந்த விழாவில் தமிழக உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத், சட்டமன்ற உறுப்பினர்கள் மதியழகன், பிரகாஷ், ராமசந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவினைத் தொடந்து தமிழக முதல்வர் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மதியழகன் வீட்டுக்கு சென்ற முதல்வர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதியழகன் அவர்களின் தாயார் வயது மூப்பின் காரணமாக காலமானதைத் தொடர்ந்து அவரது திரு உருப்படத்தினை தமிழக முதல்வர் திறந்து வைத்து மலர் தூவி மரியதை செலுத்தினார்
பின்னர் அங்கு இருந்து தமிழக முதல்வர் சிறப்பு விமானம் மூலமாக சென்னை சென்றார்.
செய்தியாளர்
மாருதி மனோ