கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதி மொழி.!

கிருஷ்ணகிரி

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதி மொழி.!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பாக, கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., தலைமையில் அனைத்து அரசு துறை அலுவலர்கள்  எடுத்துக்கொண்டனர்.

உடன், மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருமதி அபிநயா, துணை ஆட்சியர் (பயிற்சி) செல்வி.க்ரிதி காம்னா, இ.ஆ.ப., தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர்கள் ராஜசேகர், (அமலாக்கம்), ஆர்.மாதேஸ்வரன் (சமூக பாதுகாப்பு) உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ