மழலையர் பள்ளி ஆண்டு விழா
கீழக்கரை

மழலையர் பள்ளி ஆண்டு விழா
கீழக்கரையில் சிறு குழந்தைகள் ஆரம்ப கல்வியின் தொடக்க இடமான நியூவே ஹோம் ஹேர் பள்ளி மற்றும் எக்ஸலன்ட் டியூசன் சென்டரின் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது.
விழாவின் ஆரம்பமாக கடவுள் வாழ்த்துடன் ( கிராத் ) தொடங்கியது. மழழை செல்வங்கள் பலரும் ஆடல் பாடலுடன் நடனமாடியது அனைவரையும் கவர்ந்தது.நிர்வாகி யாஸ்மின் பாத்திமா விழாவை ஆரம்பிக்க ஆஃப்ரின் ஸனோபர் வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக ஜனாபா சாகிரா பானு { M.com, M bill, B.ed } அவர்கள் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு பரிசு வழங்கி கௌரவித்தார்.வந்திருந்த மாணவ/ மாணவியர் மற்றும் பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்து விழா நிறைவு பெற்றது.
செய்தியாளர்
காதர்
ஆசிரியர் & வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi ( MR )