உஸ்வதுன் ஹஸனா முஸ்லிம் சங்கத்தின் 100 ஆம் ஆண்டுவிழா.!
கீழக்கரை

உஸ்வதுன் ஹஸனா முஸ்லிம் சங்கத்தின் 100 ஆம் ஆண்டுவிழா.!
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மேலத் தெரு உஸ்வதுன் ஹஸனா முஸ்லிம் சங்கம் 100 ஆம் ஆண்டு விழா சதக் அப்பா வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பால் வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், சிறுபான்மை நலன், மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் நாசர் மற்றும் இராமநாதபுரம் மாவட்ட செயலாளரும், மாவட்ட சட்ட மன்ற உறுப்பினருமான காதர் பாட்சா முத்துராமலிங்கம் M.L.A. பரமக்குடி தொகுதி முருகேசன்M.L.A., சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி டாக்டர் எழிலன் M.L.A., உட்பட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களை உஸ்வத்துன் ஹஸனா முஸ்லிம் சங்க நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.
சதக் அறக்கட்டளை சேர்மன் யூசுப் சாகிப், தொழிலதிபர் டாக்டர் P.R.L. சதக் அப்துல் காதர், சங்க தலைவர் முஜிபுர் ரகுமான், P.R.L. ஹாமீது இப்ராஹிம், அனைத்து சமுதாய கூட்டமைப்பின் சார்பில் சேக் உசேன், மேலத்தெரு ஜமாஅத்தார்கள், மற்றும் மாவட்ட, நகர் திமுக கட்சியினர் உட்பட பலரும் திரளாக கலந்து கொண்டனர்.
காதர்