விளையாட்டு உபகரணங்கள் காப்பீடு வழங்கும் விழா.!

கீழக்கரை

விளையாட்டு உபகரணங்கள் காப்பீடு வழங்கும் விழா.!

விளையாட்டு உபகரணங்கள் காப்பீடு வழங்கும் விழா.

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை P.S.M. மஹாலில்,  மாவட்டத்தில் உள்ள கபாடி விளையாட்டு வீர/ வீராங்கனை 800 நபர்களுக்கு ₹1300/ க்கு இன்சூரன்ஸ் மற்றும் ₹3000/ மதிப்புள்ள டீ சர்ட், சூட், சூ உட்பட  விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பால் வளத்துறை மற்றும் கதர் கிராம மேம்பாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு அமைச்சர் ராஜ கண்ணப்பன், இராமநாதபுரம் மாவட்ட பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் நவாஸ் கனி, இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
     

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில் " கபாடி விளையாட்டு வீரர்கள் மட்டுமின்றி படிப்படியாக ஹாக்கி மற்றும் கால்பந்து விளையாட்டு வீரர்களுக்கும் இத் திட்டத்தால் பயனடைவர் " என்றார்.

காதர்